சாவு எண்ணிக்கை 55 ஆனது: மேலும் 12 பேரின் நிலைமை கவலைக்கிடம்
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றிரவு 2 பேரும், இன்று காலை மேலும் ஒரு பெண் பலியானதையடுத்து சாவு எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. காயமடைந்தமணமகள் உள்ளிட்ட 50 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 12 பேரின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது.
கிருஷ்ணமூர்த்தி ஐய்யங்கார் என்பவரின் பேரன் குரு ராகவேந்திரா என்ற குருராஜனுக்கும், ஜெயஸ்ரீக்கும் நேற்று திருமணம் நடக்கஇருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் மாப்பிள்ளை உள்ளிட்ட 52 பேர்நேற்று பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
ஜெயஸ்ரீ உள்பட 150 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்டோருக்கு ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி அரசு, தனியார்மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களில் சுசீலா என்பவர் உள்பட 2 பெண்களும், ஒரு ஆணும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இதனால் இறந்தவர்களின்எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ள. மேலும் 12 பேருடைய நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.
மணமகன் வீட்டைச் சேர்ந்த 6 பேர் முதலில் தீ விபத்தில்இறந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால் படுகாயங்களுடன் மயக்கநிலையில் அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.
இறந்த மணமகனின் தாத்தா கிருஷ்ணமூர்த்தி ஐய்யங்கார் ஸ்ரீரங்கம் பகுதியின் மிகவும் பிரபலமான ஆச்சாரியார் ஆவார்.
இதற்கிடையே, விபத்தில் இறந்த 45 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல்களும்,முகங்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போய்க் காணப்படுவதால் அவர்கள் யார் என்பதைஅடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இறந்தவர்களில் 7 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications