திருமாவளவனுக்கு இதயத்தில் மட்டுமே இடம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஜெகத்ரட்சகனின் வீரவன்னியர் பேரவை, ஆர்.எம்.வீரப்பனின்எம்.ஜி.ஆர். கழகம் ஆகிய கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் சீட் ஒதுக்கப்படவில்லை.

மாறாக திமுக தலைவர் கருணாநிதியின் பாணியில் அவர்களுக்கு இதயத்தில் மட்டும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் முக்கியக் கட்சிகள், அதாவது ஓட்டு பலம் உள்ள கட்சிகளுக்கு மட்டுமே சீட்கள்வழங்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுக்கு சீட் கொடுக்கப்படவில்லை.

கடந்த தேர்தலில் சீட் வழங்கப்பட்ட ஜெகத்ரட்சகன் எம்.பிக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. கடந்ததேர்தலில் அவர் திமுக சின்னத்தில் எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் அரக்கோணத்தில் போட்டியிட்டார். ஆனால்இத்தொகுதி இப்போது பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு எதிராக வீரவன்னியர் பேரவை என்ற பெயரில் வன்னியர் சமூகஅமைப்பை நடத்தி வருகிறார் ஜெகத்ரட்சகன். ராமதாஸின் கோட்டையாக கருதப்படும் பல பகுதிகளில் வீரவன்னியர் பேரவையை ஆரம்பித்து கலக்கி வருபவர். இதனால் ராமதாஸுக்கும், ஜெகத்ரட்சகனுக்கும் இடையேகடும் போட்டி நிலவுகிறது.

இதனால் ஜெகத்ரட்சகனுக்கு கூட்டணியில் இடம் தரக் கூடாது என்று திமுகவுக்கு நிபந்தனை விதித்தார் ராமதாஸ்.அதை கருணாநிதியும் ஏற்றுக் கொண்டுவிட்டார்.

இதையடுத்து கடந்த முறை ஜெகத்ரட்சகன் போட்டியிட்ட அரக்கோணத்தை பா.ம.க. வம்படியாகக் கேட்டுவாங்கிவிட்டது. இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியை எம்.ஜி.ஆர். கழக பொதுச் செயலாளர்ஆர்.எம்.வீரப்பனும், ஜெகத்ரட்சகனும் நேரில் சந்தித்து அரக்கோணத்தைக் கேட்டனர். ஆனால் கருணாநிதி மறுத்துவிட்டார். இதனால் ஜெகத்ரட்சகன் பெரும் அப்செட்டில் உள்ளார்.

இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தொகுதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு விட்டது. கடந்ததேர்தலில் சிதம்பரம் தொகுதியில் இக் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் போட்டியிட்டு சுமார் 2.25லட்சம் ஓட்டுக்களுக்கு மேல் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருமாவளவனும் அப்செட்.

இதே நிலைதான் புதிய தமிழகம் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது. இதயத்தில் மட்டும் இடம் கொடுப்போம்,நாடாளுமன்ற தொகுதி கிடையாது என்று திமுக தரப்பில் கூறி வருவதாகவும், இதனால் கூட்டணியில் நீடிப்பதா,வேண்டாமா என்ற குழப்பத்தில் கிருஷ்ணசாமி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணியில் இடம் கிடைக்காவிட்டால் பரம வைரிகளான திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் கை கோர்த்து,தலித்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கி திமுகவுக்கு பாடம் புகட்டவும்வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்களுக்கு அதிமுக தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைக்கலாம் என்றும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+