கண்ணனுக்கு ஆதரவு கூடுகிறது; கலக்கத்தில் காங்கிரஸ்!
பாண்டிச்சேரி:
காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய ப.கண்ணனுக்கு பல்வேறு தலைவர்கள் மத்தியில் ஆதரவு கூடிவருகிறது. இதனால் ரங்கசாமி தலைமையிலான பாண்டிச்சேரிகாங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றுகாங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது.
மக்கள் தலைவர், புரட்சித் தலைவர் என்று பாண்டிச்சேரி மக்களால் அழைக்கப்படும் ப.கண்ணன் சமீபத்தில்காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். தான் விலகியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
கண்ணனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஏழுமலை ஆகியோரும்ராஜினாமா செய்துள்ளனர். மேலும் 2 கண்ணன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் தாங்கள் வகித்து வரும் வாரியத்தலைவர் மற்றும் அரசுக் கொறடா பதவிகளை உதறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் கண்ணனுக்கு பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.பியான எம்.ஓ.எச்.பாரூக், கண்ணனுக்கு ஆதரவுதெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
கண்ணன் எடுக்கும் முடிவுகளுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்று கண்ணனிடம் பாரூக்உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், தனது மகன் ஷாஜகானை உடனடியாக அமைச்சராக்க வேண்டும்என்று முதல்வர் ரங்கசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி ஆகியோருக்கு கட்டாய கோரிக்கையும்வைத்துள்ளாராம் பாரூக்.
முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் கண்ணனுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. கண்ணனுடன் சேர்ந்துரங்கசாமி அரசைக் கவிழ்க்கவும் அவர் இனி முயற்சி செய்வார் என்று பேச்சு உள்ளது. லஞ்சம் கொடுத்த வழக்கில்சிபிஐயினால் வழக்கு தொடரப்பட்டு சில மாதங்களுக்கு முன்புதான் அவர் விடுவிக்கப்பட்டார். அன்று முதல்மீண்டும் முதல்வர் பதவியைக் கைப்பற்ற வைத்தியலிங்கம் கடுமையாக முயற்சித்து வருகிறார்.
தற்போது கண்ணன் மூலம் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையைப் பயன்படுத்தி மீண்டும் முதல்வர் பதவியைக்கைப்பற்றி விட வேண்டும் என்று வைத்தியலிங்கம் தீவிரமாக முயற்சிப்பார் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தொகுதியால் ஏற்பட்ட பிரச்சினை, பாண்டிச்சேரி சட்டசபைக்குத் தேர்தல் வர வழி வகுத்துவிடுமோ என்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இத்தனை குழப்பங்களையும் முதல்வர் ரங்கசாமி எப்படிசமாளிக்கப் போகிறார் என்பதைக் காண பாண்டிச்சேரி மக்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications