மதிமுகவுக்கு4 தொகுதிகள்: இன்று அறிவிப்பு வெளியாகும்
வேலூர்:
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு நான்கு நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது. இதை மதிமுகவும் ஏற்றுக்கொண்டுவிட்டது. இதையடுத்து ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றுதெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தேர்தல் குழுவைச் சேர்ந்த மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும்,வேலூர் மத்திய சிறைக்குச் சென்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியே வந்த ஸ்டாலினும்,துரைமுருகனும் பேச்சுவார்த்தை குறித்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். வைகோவை தான் ஏற்கனவே சிறையில் சந்தித்து நெடுநாட்களாகிவிட்டதால் மீண்டும் சந்திக்க வந்ததாக ஸ்டாலின்கூறினார்.
மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் நான்து தொகுதிகள் தொடர்பாக வைகோவின் ஒப்புதல் பெறவே இருவரையும் கருணாநிதி அனுப்பிவைத்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.
திமுக தரும் 4 தொகுதிகளுக்கு வைகோவும் சம்மதம் தெரிவித்து விட்டதாக அக் கட்சியின் தலைமையகமான தாயகம்தெரிவிக்கிறது.
முன்னதாக மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் சிறையில் வைகோவை சந்தித்துப் பேசினார். வெளியே வந்த அவர்நிருபர்களிடம் பேசுகையில், நாங்கள் 6 தொகுதிகள் கேட்டோம். இதில் எத்தனை தொகுதிகள் தருவது, எதையெதைத் தருவதுஎன்பது குறித்து கலைஞர் முடிவு செய்வார்.
அவர் எத்தனைத் தொகுதிகள் தந்தாலும் அதை மதிமுக மனப்பூர்வமாக ஏற்கும். எங்களுக்கு இந்தந்த தொகுதிகள் தான்வேண்டும் என்று கேட்டு அவரைத் தொல்லைப்படுத்தவோ, பத்திரிக்கைகளுக்கு பரபரப்பு செய்திகள் தரவோ மாட்டோம்.
நாங்களும் (மதிமுக) திமுகவும் வெவ்வேறானவர்கள் அல்ல. இதனால் முதலில் கூட்டணியில் உள்ள விருந்தாளிகளுக்கு (பிறகட்சிகளுக்கு) இடங்களை ஒதுக்கிவிட்டு பிறகு எங்களைக் கூப்பிட்டு கலைஞர் பேசுவார்.
31ம் தேதிக்குள் (இன்று) தொகுதி உடன்பாட்டை முடித்து விடுவோம் என்று கருணாநிதி கூறியிருக்கிறார். இதனால் இன்றேஎங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் வெளியாகலாம் என்றார்.
சிவகாசி, பழனி, திருச்செங்கோடு, வந்தவாசி ஆகிய தொகுதிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் மதிமுக ஜெயித்திருந்தது. செஞ்சி ராமச்சந்திரன் அத்தொகுதியில் போட்டியிட்டுவென்று மத்திய அமைச்சரானார். இம்முறை திண்டிவனம் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. அதற்குப் பதில், வன்னியர்கள்நிறைந்த வந்தவாசி தொகுதி மதிமுகவுக்கு வழங்கப்படுகிறது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications