சனிக்கிழமைக்குள் வைகோ விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு வைகோவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்காத நிலையிலும், அவர் இன்றுஅல்லது நாளை ஜாமீனில் வெளியே வரவுள்ளார்.

ஜாமீன் வழங்கி பொடா நீதிமன்றம் விதித்த மிகக் கடுமையான 13 நிபந்தனைகளை சென்னை உயர் நீதிமன்றம்தளர்த்திவிட்டது. ஆனால், பொதுக் கூட்டங்களில் பேசுவது தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துவிட்டது.

வைகோ விரும்பினால் அது குறித்து தனியே மனு செய்து நீதிமன்றத்திடம் உரிய அனுமதி பெறலாம் எனநீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஆனால், மிக முக்கியமான கட்டுப்பாடுளை நீதிமன்றம் தளர்த்திவிட்டதால் இன்று அல்லது நாளை அவர் ஜாமீனில்வெளியே வருவார் என்று எதிர்பார்ப்படுகிறது.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது, தீவிரவாதமாகாது என்றும், இது பொடா சட்டத்தின்கீழ்குற்றமாகாது என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. மேலும் பொடாவில் கைதாகி ஓராண்டுக்கும்மேல் சிறையில் உள்ளவர்களின் ஜாமீன் மனுவை மற்ற சாதாரண வழக்குகள் போலவே நடத்தி ஜாமீன் வழங்கலாம்என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப் போடப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சிறையில்இருக்கும் வைகோவுக்கு ஜாமீன் வழங்க மிக மிகக் கடுமையான நிபந்தனைகளை பொடா நீதிமன்றம் விதித்ததுபுருவங்களை உயரச் செய்துள்ளது.

நேற்று வைகோவின் ஜாமீன் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகளான சிர்புர்கர், இப்ராஹிம் கலீபுல்லாஆகியோர் இந்த நிபந்தனைகளை மறைமுகமாக விமர்சித்தனர்.

முன்னதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் பேசுகையில், வைகோவுக்கு பொடாநீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிட்டது. அப்புறம் எதற்காக உயர் நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்தார் என்றுகேட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சிர்புர்கர், ஜாமீன் பெற ரூ. 1 கோடி செலுத்த வேண்டும் என்று சொன்னால்பாதிக்கப்பட்டவர் உயர் நீதிமன்றத்துக்கு வரத்தானே செய்வார். வைகோவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மிகக்கடுமையானவை. இதனால் தான் இங்கு மேல்முறையீடு செய்துள்ளார். இதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.

நிபந்தனைகளை எதிர்த்து வைகோ சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்து வாதாடிய அவரதுவழக்கறிஞர் சந்துரு, இந்த நிபந்தனைகளை ஏற்று வெளியே வருவதற்கு வைகோ பேசாமல் சிறையிலேயேஇருந்துவிடலாம் என்றார்.

வைகோ செய்ய வேண்டியது என்ன?

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தளர்த்தப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை ஏற்பதாக பொடா நீதிமன்றத்தில் வைகோஉறுதிமொழி தர வேண்டும்.

இதையடுத்து அவருக்கு பொடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் ஜாமீன் வழங்குவார். இந்த சட்டரீதியிலானபணிகள் முடிய நாளை ஆகிவிடும். இதையடுத்து அதிமுக அரசின் போலீஸ் கெடுபிடிகள், வழக்கமானஇழுத்தடிப்புகள் ஆரம்பமாகும். முடிந்தவரை காலதாமதம் செய்து அவரை போலீசார் விடுவிப்பர். பெரும்பாலும்வெள்ளிக்கிழமை மாலை அல்லது சனிக்கிழமை வைகோ வெளியே வந்துவிடுவார்.

கிட்டத்தட்ட 576 நாட்களுக்குப் பின் வைகோ சிறையில் இருந்து விடுதலையாகிறார். இதனால் அவருக்கு மிகப்பிரம்மாண்டமான வரவேற்பு வழஙக மதிமுக திடடமிட்டுள்ளது.

இதற்கிடையே ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தாலும் ஆச்சரியமில்லை.ஆனால், நெடுமாறனின் ஜாமீனை எதிர்த்து மேல் முறையீடு செய்து உச்ச நீதிமன்றத்திடம் சூடு வாங்கிக் கொண்டுதிரும்பி வந்தது தமிழக அரசு.

அந்த சூட்டை இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் வைகோ விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை தமிழகஅரசு இப்போதைக்கு நாடாது என்றே மதிமுகவினர் கருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+