எஸ்மா சட்டத்தை எதிர்த்து தலைமை செயலக ஊழியர்கள் வழக்கு
சென்னை:
டெஸ்மா அவசரச் சட்டத்தை எதிர்த்து தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில்மனுத் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
அரசு பிறப்பித்துள்ள டெஸ்மா சட்டத்தின் 2 முதல் 7 வரையிலான பிரிவுகள் மிகக் கடுமையாக உள்ளன. அரசுஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலோ அல்லது தூண்டினாலோ அவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்க இச் சட்டப் பிரிவுகள் வகை செய்கின்றன.
ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பணிக்கு வந்த அரசு ஊழியர்களைஅலுவலகத்திற்குள் நுழையவிடாமல், அவர்கள் வரவில்லை எனக்கூறி டிஸ்மிஸ் செய்ய இப்பிரிவுகள் தவறாகப்பயன்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, இச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதன்கீழ் வேலை நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களைமீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு தண்டனைகளை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நிர்வாகத் தீர்ப்பாய துணைத் தலைவர் டேவிட் கிறிஸ்டியான், இந்த மனு தொடர்பான பதிலை 8வாரத்துக்குள் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஸ்ரீதரன் டெஸ்மாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications