கருணாநிதியின் அன்பில் நனைந்த வைகோ!!
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சிறையில் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் உடல் நலம்பாதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் தன்னைக் காண வந்து நீதிமன்றத்தில் அரை மணி நேரம் காத்திருந்த திமுகதலைவர் கருணாநிதியைக் கண்டதும் அவர் கண்கலங்கினார். இதையடுத்து அவரது கண்ணீரைத் துடைத்தகருணாநிதி, முகத்தை வருடிக் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.
நேற்று முன் தினம் பூந்தமல்லி பொடா நீதிமன்றம் வர வேண்டிய நிலையில், வேலூர் சிறையில் வயிற்றுப் போக்கால்பாதிக்கப்பட்டார் வைகோ. இதனால் மயக்கம் ஏற்பட்ட நீதிமன்ற செல்லில் படுத்து உறங்கியுள்ளார்.
நீதிமன்றம் செல்ல தாமதமாகிவிட்டதாக போலீசார் கூறியதையடுத்து மிகுந்த சிரமத்துக்கிடையே தன்னை தயார்செய்து கொண்டு வேனில் ஏறி, 4 மணி பயணத்துக்குப் பின் பூந்தமல்லி வந்தார். உடல் நலக் குறைவால்வழக்கமான தன் உற்சாகத்தை இழந்திருந்தார் வைகோ.
வழக்கமாக வைகோ வரும் நேரத்தைக் கணக்கிட்டு பகல் 2.30 மணிக்கே பொன்முடி, துரைமுருகனுடன் நீதிமன்றம்வந்துவிட்டார் கருணாநிதி. ஆனால், வைகோ வராததால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார்.
இந் நிலையில் 3 மணிக்கு வைகோவின் வேன் அங்கு வந்து நுழைந்தது. அப்போது அவருடன் பேச யாரையும்போலீசார் அனுமதிக்காததால் கருணாநிதி வந்திருப்பதை அறியாத வைகோ நீதிமன்றத்துக்கு நுழைந்தார்.
அங்கே கருணாநிதி உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் அதிர்ந்தவர், அவரிடம் ஓடினார்.
இங்கே ஏன் வந்தீங்க.. எதுக்காக உடம்பை வருத்துறீங்க.. எனக்கு ஏதாவது தகவல் இருந்தால் சொல்லி அனுப்பவேண்டியது தானே?. இங்கே வந்து உட்காரனுமா, அரை மணி காத்திருக்கனுமா, இதுவரை நான் உங்களைகஷ்டப்படுத்தியது போதாதா என்று படபடவென பேசிய வைகோவை கருணாநிதி, இல்லப்பா என்று பேசிசமாதானப்படுத்துவதற்குள் வைகோவின் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்துவிட்டது.
கண்களில் இருந்து தொடர்ந்து நீர் வழிய, அதைத் துடைத்த கருணாநிதி வைகோவின் முகத்தை வாஞ்சையோடுதடவியபடி பேசினார். இதைப் பார்த்த துரைமுருகன், பொன்முடியும் கண் கலங்கினர்.
அப்போது பேசிய கருணாநிதி, நிபந்தனை, அது இதுன்னு சொல்லி வெளியே வர மாட்டேன்னுசொல்லீருவீங்களோன்னு பயந்துட்டேம்பா. அது தான் நேராவே வந்துட்டேன். வெளியே வந்துரு.. உடம்பைவருத்தாதே.. வந்துரு வைகோ என்றார்.
கண் கலங்கியபடியே அப்பாவிடம் மகன் தலையாட்டுவது மாதிரி தலையை ஆட்டினார் வைகோ.
இதையடுத்தே தனக்கு நீதிமன்றத்தில் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதையும், இதனால் நீதிமன்றம் வரத்தாமதமானதையும் வைகோ கருணாநிதியிடம் கூறினார். பேசாமா வெளியே வந்துருங்க வைகோ.. போதும் இந்தகஷ்டம் என உத்தரவிடும் தொனியில் கூறிவிட்டு கருணாநிதி கிளம்ப, அவரை கைத்தாங்கலாக கூட்டி வந்துபொன்முடியின் டாடா சபாரியின் ஏற்றிவிட்டார்.
கிளம்பும்போது வைகோவின் கையை இழுத்துப் பிடித்து உடம்பு, ஜாக்கிரதை என்றபடி கிளம்பினார். கார் போகும்திசையை நெடுநேரம் பார்த்தபடி நின்றிருந்தார் வைகோ. அவர் கண்களில் மீண்டும் நீர்!!!
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications