சென்னை வாக்காளர் பட்டியலை ஒட்டுமொத்தமாக திருத்த உத்தரவு
சென்னை:
சென்னையில் உள்ள 14 சட்டசபைத் தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியலை திருத்தியமைக்க தலைமைத்தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், லட்சக்கணக்கானபோலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறியிருந்தன.
இதையடுத்து தமிழகம் முழுவதும் ஏராளமான போலி வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலை முழுவதுமாக திருத்தியமைக்க தற்போது தலைமைத் தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலை பார்வையிட வந்த மத்திய தேர்தல் ஆணைய குழுவினர்கொடுத்த அறிக்கையின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் 14 தொகுதிகளில் 4 முதல் 5 தொகுதிகளில் மக்கள் தொகையை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாகஇருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் சென்னை மாவட்டத்தில் உள்ள 14 சட்டசபைத் தொகுதிகளிலும் முழுவதுமாக வாக்காளர் பட்டியலைதிருத்தியமைக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் 15ம் தேதிக்குள் இந்தப் பணிகளைமுடிக்குமாறும் அது மாநில தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கியிடம் கேட்டபோது, மாநிலம் முழுமைக்கும்வாக்காளர் பட்டியலை திருத்துமாறு தேர்தல் ஆணையம் கூறவில்லை. சென்னையில் உள்ள சில தொகுதிகளில்கூடுதல் வாக்காளர்களை நீக்குமாறு மட்டுமே உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications