துரோணாச்சாரியார் இப்படி செய்யலாமா? கருணாநிதி
சென்னை:
பொது மக்களின் வரிப் பணத்தை கோடிக்கணக்கில் செலவிட்டு பா.ஜ.க. அரசு செய்யும் விளம்பரங்கள்நியாயமற்றவை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசியல் ஆதாயத்துக்காக பொது மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் இறைத்து, வீணடித்து பத்திரிக்கைகளில்விளம்பரங்கள் (India Shining விளம்பரம்) செய்து வருகிறது பா.ஜ.க. அரசு. ஜனநாயக நெறிகளைக் காப்பதில்துரோணாச்சாரியாராகக் கருதப்பட்ட பிரதமர் வாஜ்பாய், பா.ஜ.கவினரின் இந்தச் செயல்களுக்கு தலையாட்டிக்கொண்டிருப்பது வேதனை தருகிறது.
புதிதாய் பொறுப்பேற்ற தலைமை தேர்தல் கமிஷ்னர் கூட, மக்களின் வரிப் பணத்தை எந்த அரசும் ஓட்டுவேட்டைக்காக செலவிடக் கூடாது என்று கூறியிருக்கிறார்.
மகாபாரதத்தில் தங்களது குருவான துரோணாச்சாரியாரை வெல்வதற்காக அவரிடம் மகன் இறந்துவிட்டதாகபொய்ச் செய்தி சொல்லி மயக்கமடையச் செய்தனர் பாண்டவர்கள். அவர் மயங்கிய நேரத்தில் விஜயன் வில்லால்அடித்தான். அதே நிலைமையில் தான் இப்போது வாஜ்பாயும் இருக்கிறார். பா.ஜ.கவினரின் நெறி மீறியசெயல்களைத் தடுக்காமல் அவர்களின் இஷ்டத்துக்கு தலையாட்டிக் கொண்டிருக்கிறார்.
மங்கை சூதகமானால் கங்கையில் முழுகலாம், கங்கையே சூதகமானால் எங்கே முழுகுவது?
திமுக கூட்டணியில் இடப் பகிர்வில் ஏதோ பெரும் குழப்பம் இருப்பது போல சிலர் பொய்ப் பிரச்சாரம் நடத்திவருகின்றனர். இதையெல்லாம் கேட்டு திமுகவினர் குழம்பிவிடக் கூடாது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அடுத்த பிரதமராக்குவோம். இதற்கு திமுக தொண்டர்கள் பாடுபடவேண்டும். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் அனைத்துத் தொகுதிகளிலும் வெல்ல திமுக தொண்டர்கள்உழைத்திட வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications