கூட்டணி டமார்: பாண்டியில் காங். தனித்துப் போட்டி?
சென்னை:
பாண்டிச்சேரியில் மட்டும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று தெரிகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக புதுவை காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்குப்பேட்டியளிக்கும்போது, திமுக தலைவர் கருணாநிதியும், தமிழக காங்கிரஸ் தலைவர் வாசனும் செய்து கொண்டதொகுதி ஒப்பந்தம் தமிழகத்திற்குத்தான் பொருந்தும். புதுவைக்குப் பொருந்தாது. அது எங்களைக் கட்டுப்படுத்தாதுஎன்று கூறியுள்ளார்.
திமுகவுடன் நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் திமுகதலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. ஆனால் தொகுதிப் பங்கீட்டில்காங்கிரஸ் கட்சி பெரும் அதிருப்தியடைந்தது.
பாமகவுக்கு பாண்டிச்சேரி தொகுதியையும், தமிழகத்தில் உள்ள சில காங்கிரஸ் தொகுதிகளை திமுகவே வைத்துக்கொண்டதாலும் அக் கட்சியில் அதிருப்தி ஏற்பட்டது.
பாண்டிச்சேரி தொகுதியை தர முடியாது என்று திமுகவும், பாமகவும் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில் தமிழககாங்கிரஸார் அந்தப் பிரச்சினையை விட்டு விட்டனர். ஆனால் பாண்டிச்சேரி காங்கிரஸார் இதை சாதாரணமாகஎடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
தொடர்ந்து கட்சி மேலிடத்திடம் பாண்டிச்சேரியை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி வந்தனர்.
இந் நிலையில் திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்டுள்ள உடன்பாடுதமிழகத்தோடு முடிந்து விட்டது. அது பாண்டிச்சேரியைக் கட்டுப்படுத்தாது என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கமல்நாத் கூறியுள்ளார். இதனால் பாண்டிச்சேரி காங்கிரஸார் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். இதேகருத்தை நாராயணசாமியும் இன்று கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் தற்போதுள்ள நிலையில் தனித்துப் போட்டியிட்டாலே காங்கிரஸ் ஜெயித்து விடும் என அக்கட்சியினர் கூறுகின்றனர். இதனால் அங்கு பா.ம.க-திமுக ஒரு கூட்டணியாகவும் காங்கிரஸ் தனித்தும் போட்டியிடும்சூழல் உருவாகியுள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications