வைகோ ஜாமீனுக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்றுசென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிபதி சிர்புர்கர் மற்றும் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த மனு விசாரணைக்குவந்தது. அப்போது, இந்த மனு மீதான விசாரணை முடியும்வரை வைகோவின் ஜாமீனுக்கு இடைக்காலத் தடைவிதிக்கும்படி, அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரினார்.
ஆனால், அக் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
அரசின் மனுவுக்கு பதிலளிக்குமாறு வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட வைகோவை பூந்தமல்லி பொடா நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.இதனையடுத்து வைகோ நேற்று முன்தினம் விடுதலையானார். அன்றைய தினமே அவருக்கு வழங்கப்பட்டஜாமீனை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
வைகோவின் முதல் கூட்டம்:
இதற்கிடையே வரும் 19ம் தேதி மதிமுக சார்பில் சென்னை அண்ணாநகரில் முதல் தேர்தல் பொதுக்கூட்டம்நடைபெறவுள்ளது.
ஜாமீனில் விடுதலையான வைகோ தனது முதல் கூட்டத்தை சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் நடத்தத்திட்டமிட்டிருந்தார். ஆனால் தேர்தல், வேட்பாளர் தேர்வு என பிஸியாகிவிட்ட அவர் கலிங்கப்பட்டி பயணத்தைஒத்தி வைத்துவிட்டு சென்னையில் உள்ள தனது கட்சியின் அலுவலகத்திலேயே இரவும் பகலுமாக நிர்வாகிகளுடன்ஆலோசனைகள் நடத்தி தேர்தல் யுத்திகள் வகுத்து வருகிறார்.
இன்றும் (9ம் தேதி) நாளையும் மதிமுகவினரிடமிருந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்களைவாங்கும் வைகோ 11, 12 ஆகிய தேதிகளில் விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்துகிறார். 13ம் தேதிமதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டியுளள அவர் 14ம் தேதி பொதுக்குழுவைக் கூட்டியுள்ளார்.
தேர்தல் காரணமாக சென்னையிலேயே தங்கிருக்க வேண்டி இருப்பதால் அண்ணாநகரிலேயே தனது முதல்பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications
