பாமக குறித்து ஜெ. கிண்டலோ.. கிண்டல்
சென்னை:
திமுக, பா.ம.க, காங்கிரஸ் கட்சிகளை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா மிகக் கடுமையாக விமர்சித்தார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய ஜெயலலிதா,
எதிர்க் கட்சிகள் வெளிநடப்புச் செய்வார்கள் என்று நான் நினைத்தபோது, சரியாக அவர்கள் அனைவரும்வரிசையாக வெளியேறினார்கள். என்ன ஒரு ஆச்சரியம் என்றால், ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாகவெளியேறியதுதான்.
எனது முழுக் கவனமும், ஒரே குறிக்கோளும் தமிழக நலன் மட்டுமே. மக்கள் நலனுக்காகத்தான் முழு வீச்சில்செயல்பட்டு வருகிறேன். ஆனால் இந்த எதிர்க்கட்சிகள் எனக்கு நல்ல பெயர் கிடைத்து விடக் கூடாது என்ற ஒரேஎண்ணத்தில் செயல்பட்டு வருகின்றன.
முதல்வராகிய என்னை எதிர்ப்பது ஒன்றுதான் அவர்களது முக்கிய வேலையாகவே உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இருந்தபோது அதன் மத்திய அமைச்சர்கள், தமிழகத்திற்கு ஒருதிட்டத்தையும் ஒதுக்கி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து வந்தார்கள்.
மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு வருவதை விட்டு விட்டு, ராணி மேரிக் கல்லூரியில் தலைமைச்செயலகத்தைக் கட்ட விடாமல் தடுக்க நினைத்தார்கள், கோட்டூர்புரத்தில் கட்டுவதை தடுக்க முட்டுக்கட்டைபோட்டார்கள்.
திமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பின்னர்தான், ஜனவரி 30ம் தேதியன்று, பைக்காரா நீர்மின் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு கொடுத்துள்ளது. இதிலிருந்தே திமுகவின்"நல்லெண்ணத்தை" புரிந்து கொள்ளலாம்.
இன்னொரு எதிர்க்கட்சியான பாமகவுக்கு எப்போதுமே ஒரே குழப்பம்தான். தேர்தல் வந்து விட்டால் எந்தஅணிக்குத் தாவுவது என்ற குழப்பம், தேர்தல் முடிந்தபிறகு எந்த அணிக்கு மாறுவது என்ற குழப்பம். அவர்களுக்கு24 மணி நேரமும் குழப்பம்தான். ஆனால் அணி மாறுவது என்ற விஷயத்தில் மட்டும் மிகத் தெளிவாகஇருக்கிறார்கள் அவர்கள் என்றார் ஜெயலலிதா.
காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல்களை, பாரதியாரின் பாடல்களை மேற்கோள் காட்டி கிண்டலடித்தார்ஜெயலலிதா. கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அவர் விடவில்லை.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications