அரசியல் கட்சி தொடங்க போவதாக விஜய்காந்த் அறிவிப்பு
சென்னை:
விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக விஜய்காந்த் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல்நெருங்கும் நேரத்தில் அவரது அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை தங்களது கட்சிக்குள் இழுக்க காங்கிரசும், பா.ஜ.கவும் முயன்று வருவதாகவும் கூறியுள்ளார்.
ரஜினியும் விஜய்காந்தும் நமக்கு விவரம் நாள் முதல் அரசியலுக்கு வரப் போவதாய் பேசிக் கொண்டேஇருக்கிறார்கள். படங்கள் ரிலீஸ் ஆகப் போகும்போது அரசியல் பேசுவது, அப்புறம் அமெரிக்கா, இமயமலைபுறப்படுவது ரஜினியின் ஸ்டைலாக இருந்து வருகிறது.
அதே போல நூறு பேர் கூடிவிட்டால் உடனே அரசியலுக்கு வருவேன் என்று பேசுவது விஜய்காந்தின் பாணியாகஉள்ளது. ஆனால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனது ரசிகர் மன்றத்தினரை நேரடியாக அரசியலில்இறக்கிவிட்டார் விஜய்காந்த். பல இடங்களில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.
இந் நிலையில் இன்று திருச்சியில் தனது மன்றத்தின் மாவட்டச் செயலாளரின் திருமணத்தில் பங்கேற்ற விஜய்காந்த்திருச்சி பெமினா ஹோட்டலில் அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
இந் நிலையில் திருச்சியில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் சிறப்புப் பேட்டி அளித்தார். அதில், விரைவில்அரசியல் கட்சி தொடங்கப் போவதாக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
நமது அரசியல் கட்சிகள் மக்களை ஜாதி, மதரீதியில் பிளந்துவிட்டன. இதை எதிர்த்து புதிய அரசியல் கட்சிதொடங்கப் போகிறேன். அது ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு இயங்கும்.
என்னை கட்சிக்குள் இழுக்க பா.ஜ.கவும் காங்கிரசும் முயன்று வருகின்றன. எனது தந்தை காந்தியவாதி, தீவிரமானகாங்கிரஸ்காரர். அதே போல நானும் ஒரு காந்தியவாதியே.
நான் பிறப்பால் ஒரு திராவிடன். இருந்தாலும் எனக்கு பிராமண எதிர்ப்போ, ஆரிய எதிர்ப்போ, இந்தி மீதுதுவேஷமோ கிடையாது. கடந்த சில ஆண்டுகளாகவே திமுக, அதிமுகவிடம் இருந்து ஒரு மரியாதையான தூரத்தில்விலகி இருக்கிறேன்.
1965ம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எனது சொந்த ஊரான மதுரையில் என் உடன் படித்தபள்ளி நண்பர்கள் பலரும் பங்கேற்றனர். ஆனால், நான் அதில் கலந்து கொள்ளவில்லை.
எனக்கு ஆங்கிலம் வராது என்பதை ஒரு குறையாகவே கருதுகிறேன். அதே நேரத்தில் நான் இங்க்லீஷ் அடிமைஇல்லை என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.
இந் நிலையில் இன்று மாலை மாவட்ட நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் கட்சிதொடங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை விஜய்காந்த் வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக திருச்சி தில்லை நகரில் அவர் மன்றக் கொடி ஏற்றினார். பின்னர் மணச்சநல்லூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த இரு இடங்களிலும் விஜய்காந்துக்கு பெரும் கூட்டம் கூடியது. மணச்சநல்லூரில்அவர் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு அருகே இருந்த பழைய சுவர் இடித்து மக்கள் மீது விழுந்ததில் பெண்கள்உள்பட பலர் காயமடைந்தனர்.
விஜய்காந்துக்கு முன்னும், பின்னுமாக அரசியல் கட்சிகள் பாணியில் நூற்றுக்கணக்கான கார்களில் அவரதுரசிகர்கள் சென்றனர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications