நிகர்நிலை பல்கலைக்கழகம் அமைக்கிறது பா.ம.க.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 100 ஏக்கர் நிலப்பரப்பில் வன்னியர்களுக்காக தனியான நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தை நிறுவ பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாநடந்தது.
திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் என்ற இடத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் இந்த நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தை பா.ம.கவின் ஒரு அங்கமான வன்னியர் கல்வி அறக்கட்டளை நிறுவவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை ஆகியவை கோனேரிக்குப்பத்தில் நடந்தது. இதில் பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, மதிமுகவின்செஞ்சி ராமச்சந்திரன், திமுகவின் துரைருகன், வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், காங்கிரஸின்அன்பரசு, திண்டிவனம் ராமமூர்த்தி, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், இந்த பல்கலைக்கழகத்தை உலகில் உள்ள வன்னியர்களுக்குஅர்ப்பணிக்கிறேன். அடுத்த ஆண்டு இந்தக் கனவுத் திட்டம் நனவாகி விடும்.
ஒவ்வொரு வன்னிய இன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நான் ஒரு கோரிக்கை விடுக்க விரும்புகிறேன்.ஒவ்வொருவரின் வீட்டிலும் உண்டியல் வையுங்கள். அதில் தினசரி 1 ரூபாயாவது போட்டு வாருங்கள். அதைசேமித்து வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு கொடுத்துதவுங்கள்.
புதிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், பல்வேறு துறைகள் இடம் பெறும். இது தவிர போட்டித் தேர்வுகளில்பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்க தனிக் கட்டடம் ஒதுக்கப்படவுள்ளது என்றார் ராமதாஸ்.
ஜாதி அரசியலே வேண்டாம் என்று கூறி தலித் கட்சிகளை புறக்கணித்த திமுகவைச் சேர்ந்த முன்னணித்தலைவர்களான துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டது பல்வேறுகேள்விகளை எழுப்பியுள்ளது.
பா.ஜ.க, அதிமுகவைத் தவிர அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இதில் கலந்து காண்டனர் என்றாலும் கூடஅத்தனை தலைவர்களும் வன்னியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் பேசிய ராமதாஸும், பா.ம.க.விழாவைப் போலவே பேசவில்லை. வன்னியர் அறக்கட்டளை தொடர்பாகவும், வன்னியர் சமூக வளர்ச்சி குறித்தும்மட்டுமே அதிகம் பேசினார்.
ஜாதி அரசியலே தேவையில்லை என்று கூறும் திமுக, தனது முன்னணித் தலைவர்களை வன்னியர்கள் சம்பந்தப்பட்டநிகழ்ச்சிக்கு மட்டும் அனுப்பியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications