மரண தண்டனை விதிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு
பெங்களூர்:
மரண தண்டனை விதிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர், பொது மன்னிப்புக் கோரி குடியரசுத் தலைவர்அப்துல் கலாமுக்கு கருணை மனு அனுப்புகிறார்கள்.
09-04-1993ம் தேதி பாலாறு அருகே நடந்த கன்னிவெடி தாக்குதலில் போலீஸார் 21 பேர் கொலைசெய்யப்பட்டனர். இது தொடர்பாக வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானபிரகாஷ், மாதய்யா, பிவிலேந்திராஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மைசூர் தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து நான்கு பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 4 பேரின் ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, 4 பேரையும் ஏப்ரல் 16ம் தேதி பெல்காம் மத்திய சிறையில் தூக்கிலிட மைசூர் மாவட்ட நீதிபதிஹெக்டே உத்தரவு பிறப்பித்தார். இந் நிலையில், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்ப 4 பேரும் முடிவுசெய்துள்ளனர்.
கருணை மனு அனுப்ப தங்களுக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கர்நாடக ஆளுநர்சதுர்வேதிக்கு அவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அக் கடிதத்தை மைசூர் மத்திய சிறை கண்காணிப்பாளர்விசுவநாதய்யா, பெங்களூர் மத்திய சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications