27 தமிழக மீனவர்களை கடத்திய இலங்கை மீனவர்கள்
நாகப்பட்டனம்:
நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 27 மீனவர்களைஇலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இத்தனை காலமாக இலங்கைகடற்படையால்தான் ஆபத்து நேரிட்டு வந்தது. ஆனால் சமீப காலமாக இலங்கைமீனவர்களும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அவ்வப்போது தமிழக மீனவர்களைத் தாக்கி மீன்கள், வலைகளைப் பறித்துச் செல்வது, கடத்திச் செல்வதுஆகிய செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள்தமிழர்கள் என்பதுதான் வேதனை.
இந் நிலையில், நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த30 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களைக் கத்தியைக் காட்டிமிரட்டினர். பின்னர் அவர்களில் 27 பேரை கத்தி முனையில் கடத்திச் சென்றனர்.அவர்களின் 5 படகுகளையும் இலங்கை மீனவர்கள் பிடித்துச் சென்று விட்டனர்.
இலங்கை மீனவர்களிடமிருந்து தப்பி வந்த 3 மீனவர்களும் இதுகுறித்து நாகை மாவட்டஆட்சித் தலைவரிடம் புகார் செய்துள்ளனர்.
முன்னதாக இவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்றதாக தகவல் வந்தது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications