நல்ல சந்திப்பு, நாட்டுக்கு தேவையான சந்திப்பு"
சென்னை:
சோனியா காந்தியுடன் தான் நடத்திய சந்திப்பு நல்ல சந்திப்பு, நாணயமான சந்திப்பு, நாட்டுக்குத் தேவையான சந்திப்பு என்று திமுகதலைவர் கருணாநிதி கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று கூறும் அநாகரீகத்தை திமுக எந்தக்காலத்திலும் ஆதரித்தது இல்லை. நாங்கள் வேற்று அணியில் இருந்தபோதும் கூட அவரைத் தனிப்பட்ட முறையில் அநாகரீகமாகவிமர்சித்தது இல்லை.
அண்ணா வழியில் பண்பாட்டோடு அரசியல் நடத்துபவர்கள் நாங்கள்.
அவருடனான இந்தச் சந்திப்பு நல்ல சந்திப்பாக, நாணயமான சந்திப்பாக இருந்தது. இது நாட்டுக்கும் மிகத் தேவையான சந்திப்பு.அவரது மாமியாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியும் இதைப் போலத் தான் அறிவாலயம் வந்து என்னைச் சந்தித்தார்.அதே வழியில் அவரது மருமகள் சோனியாவும் நடந்துள்ளார். அவரை பிரதமராக திமுக ஏற்கும்.
திமுக வேட்பாளர் பட்டியல், விருதுநகர் மாநாட்டின்போது வெளியிடப்படும். அனைத்துத்தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்அவர்.
கருணாநிதிக்கு கிருஷ்ணா நன்றி:
இதற்கிடையே இன்று பாண்டிச்சேரி வந்த கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததிமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இன்று காலை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்துக்கு தனிப்பட்ட பயணமாக வந்த அவர் பாண்டிச்சேரி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஜனநாயகமுற்போக்குக் கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைக்கும். இத்தகைய மதச்சார்பற்ற கூட்டணியை அமைத்த கருணாநிதிக்கு நன்றி.
தென் மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றியைப் பெறும். கர்நாடகத்திலும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிவெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்.
காவிரியில் போதுமான தண்ணீர் இல்லாதது, கர்நாடகத்தில் நிலவும் வறட்சி ஆகியவை காரணமாகவே தமிழகத்துக்குத் தண்ணீர்திறந்து விட முடியவில்லை என்றார் அவர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications