திருமாவளவன், கிருஷ்ணசாமிக்கு திருநாவுக்கரசர் விருந்து !
சென்னை:
பா.பா.ஜ.க.-அதிமுக கூட்டணியில் இடம் பிடிக்க முயன்ற திருமாவளன், டாக்டர் கிருஷ்ணசாமியை முதல்வர்ஜெயலலிதா சேர்க்க மறுத்துவிட்டார்.
திமுக திமுக கூட்டணியில் இடம் கிடைக்காததால் தனித்துப் போட்டி என்று அறிவித்த புதிய தமிழகம், விடுதலைச்சிறுத்தைகள் ஆகியவை பின்னர் ஒன்றாய் கை கோர்த்தன. அவர்களுடன் மக்கள் தமிழ் தேசம் கட்சியின்தலைவரான கண்ணப்பனும் சேர்ந்தார்.
இதையடுத்து மூவரும் டெல்லி சென்று வெங்கைய்யா நாயுடு உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்துதமிழகத்தில் தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும், அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும்போதுதங்களுக்கும் தலா ஒரு சீட் பெற்றுத் தர வேண்டும் என்று கோரினர்.
இவர்களை கூட்டணியில் சேர்த்தால் தலித், கோனார் சமூகத்தினரின் ஓட்டுக்கள் கிடைக்குமே என்றயோசனையுடன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் நாயுடு பேசினார். ஆனால், எடுத்த எடுப்பிலேயேஇந்த யோசனையை ஜெயலலிதா நிராகரித்துவிட்டார்.
தலித் மக்களின் ஓட்டுக்கள் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு சாதகமாகவே இருந்து வருவதாகக்கூறிய ஜெயலலிதா தலித் கட்சிகளின் தலைவர்களான திருமாவளன், கிருஷ்ணசாமியை நம்பி நாங்கள் இல்லைஎன்று கூறிவிட்டார்.
மேலும் கண்ணப்பன் குறித்து இனி எங்களிடம் பேசவே கூடாது என்றும் பா.ஜ.கவுக்கு நோஸ்-கட் கொடுத்ததாகத்தெரிகிறது. இதையடுத்து இந்த மூவரிடம் இருந்தும் பா.ஜ.க. விலகிவிட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் மத்திய உணவுத்துறை அமைச்சருமானசரத் யாதவிடம் இந்த மூவரும் சென்று பேச்சு நடத்தினர். கண்ணப்பனும் யாதவும் ஒரே சமூகத்தினர் என்பதால்இந்த மூவருடனும் உடனடியாக கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுவிட்டது ஐக்கிய ஜனதா தளம்.
இதனை யாதவ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது கண்ணப்பன், திருமாவளவன்,கிருஷ்ணசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.
இவர்களுக்காக தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவும் சரத் யாதவ் முன் வந்துள்ளார். மேலும் சமதா கட்சியின்தலைவரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டசும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யமுன் வந்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும் கூட பா.ஜ.க.-அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யபெர்னாண்டசும் யாதவும் முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஐக்கிய ஜனதா தளத்துக்கு தமிழகத்தில்அட்ரசே கிடையாது என்பது அதைவிடக் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இன்று டெல்லியில் தனது இல்லத்தில் கண்ணப்பன், திருமாவளவன், கிருஷ்ணசாமி ஆகியோருக்குதிருநாவுக்கரசர் விருந்தளித்தார். அப்போது புதுக்கோட்டை தொகுதியில் அதிமுகவுக்கு எதிராக தனது ஆட்களுடன்சேர்ந்து உங்களது தொண்டர்களையும் இறக்கிவிடுங்கள் என்று மூவரிடமும் திருநாவுக்கரசு கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications