அதிமுக தொகுதிப் பங்கீடு: பா.ஜ.க. தொண்டர்கள் அதிருப்தி- இல.கணேசன்
சென்னை:
வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரும்பாடுபட்டு தயார் செய்து வந்ததொகுதிகளை அதிமுக கொடுக்காததால், பா.ஜ.க.வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக அகில இந்திய பா.ஜ.கசெயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் ஹிட் லிஸ்டில் இருப்பவர்களில் முக்கியமானவர் இல.கனேசன். இவர் போட்டியிடவாய்ப்பு இருக்கக் கூடாது என்பதற்காகவே தென் சென்னையை அதிமுக தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் சென்னையின் முற்பட்ட வகுப்பினரின் வாக்குகளை குறி வைத்துக் காத்திருந்த இவரால் அதிமுக தந்துள்ளவேறு எந்தத் தொகுதியிலும் போட்டியிட முடியாது. இதனால் கடும் அதிருப்தியில் உள்ளார் கணேசன்.
இந் நிலையில் இன்று சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், அதிமுக கூட்டணியில் எங்களுக்கு7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், விரும்பிய தொகுதிகள் கிடைக்காததில் வருத்தம் இருக்கத்தான்செய்கிறது.
வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு களப்பணிகள் செய்து, வெற்றிப்பாதையை தயார் செய்து வைத்திருந்த திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தென் சென்னை ஆகியதொகுதிகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. இதை நாங்கள் மறைக்கவிரும்பவில்லை.
இந்த தொகுதிகளைச் சேர்ந்த பா.ஜ.க. தொண்டர்கள் தங்களது வருத்தத்தையும், அதிருப்தியையும், தந்திகள்மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் தெரிவித்து வருகிறார்கள்.
இருப்பினும் இந்த மன வருத்தத்தை மறந்து விட்டு கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும். பிரதமராகமீண்டும் வாஜ்பாய் அவர்கள் வருவதற்கு தமிழக பா.ஜ.க.வும் சிறந்த பங்களிப்பை செய்ய வேண்டும் என்றுதொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
பா.ஜ.க. தேர்தல் குழு நாளை சென்னையில் கூடுகிறது. அப்போது தேர்தல் பிரசார உத்திகள் உள்ளிட்டவை குறித்துமுடிவு செய்யப்படும் என்றார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications