நாளை தொடங்குகிறது திமுக தென் மண்டல மாநாடு: களை கட்டியது விருதுநகர்
விருதுநகர்:
திமுகவின் தென் மண்டல மாநாடு நாளை விருதுநகரில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்தமாநாட்டில் வேட்பாளர்கள் பட்டியலையும், தேர்தல் அறிக்கையையும் அக் கட்சியின் தலைவர் கருணாநிதிவெளியிடுகிறார்.
சத்திரெட்டிப்பட்டியில் பல பேரிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டு மாநாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல கோடி செலவில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டச் செயலாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தலைமையிலான திமுக நிர்வாகிகள் இருமாதங்களாக மாநாட்டு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இதில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு பேசவுள்ளனர். இதனால் திமுகதொண்டர்கள் தவிர மற்ற எதிர்க் கட்சிகளின் தொண்டர்களும் விருதுநகரில் குவிந்து வருகின்றனர்.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் 10 லட்சம் திமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டுத் திடலிலேயே கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுக்கு ஏ.சியுடன் கூடியஓய்வறைகள் கட்டப்பட்டுள்ளன. தீப் பிடிக்காத மாபெரும் இரும்புப் பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.
பந்தலில் நூற்றுக்கணக்கான டிவிக்களும் வைக்கப்பட்டு மேடை நிகழ்ச்சிகளை அனைவரும் பார்க்க வசதிசெய்யப்பட்டுள்ளது.
குடிநீர் வசதிக்காக மாநாட்டுத் திடலில் 10க்கும் மேற்பட்ட போரிங்குகள் போடப்பட்டுள்ளன. மின்சாரத்தை கட்செய்து தமிழக அரசு இடைஞ்சல் தரலாம் என்பதால் ராச்டத ஜெனரேட்டர்களும் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுக்கு வருவோருக்கு உணவு, தண்ணீர் பாக்கெட்டுகளை குறைந்த விலையில் விற்க ஸ்டால்கள்அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்காக ரூ. 1.6 கோடி செலவிடப் போவதாக திமுக கூறினாலும் உண்மையில்அதைப் போல பல மடங்கு செலவிடப்படலாம் என்று தெரிகிறது.
பணத்துக்குப் பஞ்சமே இல்லாத கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தனது சொந்தக் காசையும் அள்ளி வீசிவருகிறார். மேலும் மாநாட்டு ஏற்பாடுகள் துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினின் நேரடிக் கட்டுப்பாட்டில்நடப்பதால் கட்சித் தலைமையிடம் இருந்தும் வேண்டிய அளவுக்கு நிதி வாரித் தரப்படுகிறது.
இதற்கிடையே மாநாடுத் திடல் அமைக்க நிலத்தை திமுகவுக்கு வாடகைக்குத் தந்தவர்களுக்கு அரசு அதிகாரிகள்தரப்பில் இருந்து தொல்லைகள் ஆரம்பித்துள்ளன. ஆனால், அவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைச் சந்திக்ககே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பல வழக்கறிஞர்களையும் தயார் நிலையில் வைத்துள்ளார்.
மாநாட்டுக்கு வரும் தலைவர்கள், கட்சியினர் தங்குவதற்கு விருதுநகர் மற்றும் சுற்றுப்புற நகர்களில் உள்ளபெரும்பாலான லாட்ஜ்கள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்களையும் திமுகவினர் புக் செய்துவிட்டனர். இதுதவிர 50க்கும் மேற்பட்ட வீடுகளும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகரில் எங்கு நோக்கினும் திமுக கொடிகளும், போஸ்டர்களும், வரவேற்பு வளைவுகளுமாகக்காட்சியளிக்கிறது. விருதுநகர் செல்லும் முக்கிய சாலைகளில் எல்லாம் பல கி.மீ. தூரத்துக்கு திமுக கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
நாளை காலை 9 மணிக்கு மாநாட்டுக் கொடியை முன்னாள் மத்திய அமைச்சர் எச்.ராஜா ஏற்றி வைத்து நிகழ்ச்சியைத்துவக்கி வைக்கிறார். மாநாட்டுத் திடலை நடிகர் சரத்குமார் திறந்து வைக்கவுள்ளார்.
மாநாட்டுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமை தாங்குகிறார். பின்னர் கட்சியின் முக்கியப்பிரமுகர்கள், சொற்பொழிவாளர்கள், தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் பேசுகின்றனர். தொடர்ந்து இரவு 9மணிக்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் பேசுகிறார்.
நாளை மறுதினமான ஞாயிற்றுக்கிழமை காலை நாகூர் ஹனீபாவின் இன்னிசைக் கச்சேரியுடன் மாநாடுதொடங்குகிறது. இதில் மீண்டும் கட்சியின் நிர்வாகிகள் பேசுகின்றனர். பின்னர் காங்கிரஸ் தலைவர் வாசன், பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன், முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகிய கூட்டணிக் கட்சித்தலைவர்கள் பேசுகின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி நிறைவுரையாற்றுகிறார்.
அப்போது அவர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்று தெரிகிறது. வேட்பாளர் பட்டியலையும்வெளியிடுவார் என்று கூறப்பட்டாலும் அது சந்தேகமாகவே உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நெடு நாட்கள் உள்ளநிலையில் இப்போதே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டால் சீட் கிடைக்காதவர்கள் கோஷ்டி கலாட்டாவில்இறங்க நிறைய அவகாசம் கிடைத்துவிடும் என்று திமுக தலைமை நினைப்பதாகத் தெரிகிறது.
மேலும் வேட்பாளர்காளாக அறிவிக்கப்பட்டவர்கள் இப்போதே பணத்தை செலவழிக்க ஆரம்பித்துவிட்டால்,தேர்தல் நெருங்கும் நேரத்தில் கையை பிசைந்து கொண்டு நிற்பார்கள் என்ற கவலையும் திமுக தலைமையிடம்நிலவுகிறது.
இதனால் மாநாட்டில் வேட்பாளர் பட்டியலை கருணாநிதி வெளியிடுவது சந்தேகமே.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications