வறட்சி நிலைமை: மத்திய குழு இன்று தமிழகம் வருகை
தமிழகத்தின் வறட்சி நிலை குறித்து ஆராய மத்தியக் குழு இன்று சென்னை வருகிறது.
தேசியக் கூட்டுறவு வளர்ச்சி வாரியத்தின் தவைவர் தினேஷ் ராய் தலைமையில் வரும் இக் குழுவில்விவசாயத்துறை, கால்நடைத்துறை, நீர்வளத்துறையைச் சேர்ந்த 9 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக வேளாண்மைத்துறை, பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தும் இக் குழு பின்னர் முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசவுள்ளது.
இதைத் தொடர்ந்து நாளை இக் குழு மூன்றாகப் பிரிந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலையைநேரில் ஆய்வு செய்யவுள்ளது. இரு நாட்கள் ஆய்வு செய்த பின்னர் மீண்டும் தமிழக அதிகாரிகளுடன் இக் குழுஆலோசனையில் ஈடுபடும்.
இதையடுத்து டெல்லி திரும்பும் இக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும்.
தமிழகத்தில் வறட்சி நிலையை சமாளிக்க ரூ. 1,584 கோடியையும் 10.8 லட்சம் டன் அரிசியையும் மாநில அரசுகோரியுள்ளது.
ஆய்வுக் குழு வழங்கும் அறிக்கையைப் பொறுத்து நிதியையும் அரிசியையும் தமிழகத்துக்கு மத்திய அரசுவழங்கும்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications