டெல்லி வானில் அமெரிக்க ராணுவ விமானத்தில் தீ
டெல்லி:
111 வீரர்களுடன் டெல்லியில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப் படை விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் மிக அவசரமாக டெல்லியில் விமான நிலையத்திலேயேதரையிறங்கியது.
குவாலியரில் நடக்கும் இந்திய-அமெரிக்க கூட்டு விமானப் படை போர்ப் பயிற்சிக்காக எப்-15 ரக போர்விமானங்கள் உள்பட பல அமெரிக்க விமானங்கள் இந்தியா வந்துள்ளன. இதில் கே.சி-10 ரக ஏர் டேங்கர்விமானமும் ஒன்று. இது வானிலேயே பிற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானமாகும்.
இன்று இந்த விமானம் குவாலியரில் இருந்து டெல்லி வந்தது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்எரிபொருள் நிரப்பிக் கொண்டு பகல் 2.10 மணிக்கு அந்த விமானம் குவாம் தீவில் உள்ள அமெரிக்க விமானதளத்துக்குக் கிளம்பியது. அதில் 111 அமெரிக்க ராணுவ வீரர்கள் இருந்தனர்.
பறக்க ஆரம்பித்த 16 நிமிடங்களில் அதன் ஒரு என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து மீண்டும் இந்திராகாந்தி விமான நிலையத்துக்குத் திரும்பி வருவதாக பைலட் தகவல் தந்தார்.
உடனடியாக எமர்ஜென்சி லேண்டிங்குக்கான அவசர நிலைக்கு விமான நிலையம் தயாரானது. 2.42 மணிக்கு அந்தவிமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. உடனடியாக தீயும் அணைக்கப்பட்டது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications