பொடா- டெஸ்மா வாபஸ், தமிழில் யு,பி.எஸ்.சி தேர்வு, இளைஞர்களுக்கு வேலை- திமுக தேர்தல் அறிக்கையில் உறுதிமொழி
விருதுநகர்:
பொடா சட்டத்தை நீக்குவோம், தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெறுவோம், பொது சிவில் சட்டம் கூடாது,டெஸ்மா சட்டத்தை வாபஸ் பெறுவோம், அயோத்தி பிரச்சனைக்கு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அனைவரும்கட்டுப்பட வேண்டும், சட்டமன்றங்களைக் கலைக்கும் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை ஒட்டுமொத்தமாகநீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகள், கோரிக்கைகளுடன் திமுகவின் தேர்தல்அறிக்கையை கருணாநிதி இன்று வெளியிட்டார்.
விருதுநகரில் இன்று திமுகவின் தென் மண்டல மாநாடு கோலகலமாகத் தொடங்கியது. லட்சக்கணக்கானதொண்டர்கள் மத்தியில் மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதிவெளியிட்டார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* மதவாதக் கும்பல்களால் ஏற்படுத்தப்படும் வன்முறைகள், கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகதிமுக இனி துணை நிற்கும்.
* மத்திய அரசு வேலை வாய்ப்புகளுக்காக நடத்தப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.)தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட பிற தேசிய மொழிகளிலும் நடத்த வேண்டும். நேர்முகத் தேர்வையும் தமிழ்உள்ளிட்ட தேசிய மொழிகளில் நடத்த வேண்டும். (இப்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நேர்முகத் தேர்வுநடத்துவதால் இந்தி பேசும் மாநிலத்தவர் தவிர மற்ற, ஆங்கில அறிவு குறைந்த, சாதாரண இந்தியர்களால் மத்தியஅரசுப் பணியில் சேர மிகவும் சிரமப்பட வேண்டிய வெட்கட்கேடான சூழல் நிலவுகிறது.)
* தமிழகத்தில் ஒரு உச்ச நீதிமன்ற பெஞ்ச் அமைக்க வேண்டும்.
* பொடா சட்டம் அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்தச் சட்டத்தைஉடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
* தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைக்க திமுக தொடர்ந்து பாடுபடும். இதன்மூலம் தமிழ் மொழி வளர்ச்சிக்குமத்திய நிதி ஒதுக்கீடு கிடைக்கும்.
* தனியார்மயமாக்கல், உலக மயமாக்கல் மூலம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில்நுழைந்துள்ளன. நிறைய வேலை வாய்ப்புக்கள் உருவாகி வந்தாலும் இந்த நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகடைபிடிக்கப்படவில்லை. இதனால் சமூகரீதியில் ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கப்பட்ட, கல்வியும் மறுக்கப்பட்டுஆண்டாண்டுகளாய் ஒதுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இந்த தனியார்மயமாக்கலால்எந்தப் பயனும விளையவில்லை. இதனால் இந்த நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு கோருவோம்.
* படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கித் தருவோம். இதற்காக போர்க்கால வேகத்தில் திட்டங்கள் தீட்டுவோம்.
* மாநில அரசுகள் அதிக சுதந்திரத்துடனும், அதிகாரத்துடன் செயல்படும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும். மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை ஒட்டுமொத்தமாக நீக்கவேண்டும்.
* பல்வேறு மதத்தினர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இந்தப் பூமியில் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எந்தமதத்தின் உரிமையையும் பறிக்கக் கூடாது. அரசியல் சட்டம் தந்துள்ள உரிமையைப் பறிக்க திமுக அனுமதிக்காது.
* அயோத்திப் பிரச்சனையில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு யாராயிருந்தாலும் கட்டுப்பட வேண்டும். நீதிமன்றம்மூலமே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
* தமிழகத்தில் பத்திரிக்கைகளின் குரல்வலை நெரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பத்திரிக்கை சுதந்திரத்தைப்பேணிக் காக்க புதிய சட்டம் கொண்டு வருவோம்.
* போராட்டம், வேலை நிறுத்தம் ஆகியவை ஜனநாயகத்தின் ஒரு அங்கம். நியாயமான கோரிக்கைகளுக்காகப்போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் உளபட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உரிமை உண்டு. இதை உறுதிசெய்ய நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும். தமிழக அரசு டெஸ்மா சட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டும்.
* பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக-வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசுக்கு வழிகாட்டும் வகையில்நாடாளுமன்றத்தில் ஒரு கமிட்டியை உருவாக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான நலக்கமிஷனுக்கு கூடுதல் அதிகாரங்கள் தரப்பட வேண்டும்.
* ரூ. 1 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். இப்போது ரூ.50,000க்கு மேல் ஆண்டு ஊதியம் இருந்தால் வரி விதிக்கப்படுகிறது. இதனால் கீழ்நடுத்தர மக்கள்பாதிக்கப்படுகின்றனர்.
* அதிமுக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை தருவோம்.
பாஜகவிடம் இருந்து விலகியது ஏன்?
தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் தருமாறு திமுக விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. மேலும்பொடாவை அதிமுக அரசு தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கச் சொன்னோம். அதற்கும் பா.ஜ.க. செவிசாய்க்கவில்லை.
மதமாற்றத்துக்குத் தடை விதிப்பது, அயோத்தி விவகாரத்தை வைத்து ஆதாயம் தேடுவது போன்ற செயல்களில்பா.ஜ.க. தலைவர்கள் ஈடுபட்டனர். அதே போல அதிமுகவின் அராஜகத்தை வெறுமேன வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருந்தனர். இதனால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு திமுக விலகி வெளியே வந்தது.
இவ்வாறு திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications