ராமதாசுக்கு ரஜினி ரசிகர்கள் கறுப்புக் கொடி: பா.ம.க. தொண்டர்கள் பதிலடி- ரசிகர் மண்டை உடைப்பு
விருதுநகர்:
திமுக தென் மண்டல மாநாட்டில் பங்கேற்க வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்குஎதிராக ரஜினி ரசிகர்கள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் மீது ராமதாசின் ஆதரவாளர்கள் கல்வீசினர். இதில் ஒரு ரஜினி ரசிகர் பலத்த காயமடைந்தார்.
ராமதாஸ்-ரஜினி இடையே பனிப்போர் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது. வெளிப்படையாக இதுவரை ஏதும்பேசாத ரஜினி, பின்னணியில் இருந்த வண்ணம் ராமதாசுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார்.
அவரது தளபதியான சத்யநாராயணா மூலமாக ராமதாஸ் எதிர்ப்பாளர்களாக வீர வன்னியர் பேரவைத் தலைவர்ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் ரஜினி பேசி வருகிறார். வரும் தேர்தலில் பா.ம.கவுக்குஎதிராக களம் இறங்கவும் ரசிகர்களுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்.
இதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பது ஆளும் அதிமுக தான். விருதுநகர் வரும் ராமதாசுக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் ரஜினி ரசிகர்கள் அனுமதி கோரினர். இதற்கு உடனடியாக அனுமதிவழங்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மதுரையில் இருந்து விருதுநகர் செல்லும் வரை பல இடங்களில் ரஜினி ரசிகர்கள் போலீஸ்பாதுகாப்புடன் கூடினர். கறுப்புக் கொடிகளுடன் கூடிய அவர்கள் ராமதாசின் கார் செல்லும்போது அவருக்குஎதிராக கோஷமிட்டனர்.
இதை எதிர்பார்த்திருந்த பா.ம.கவினர் ராமதாசின் காருக்கு முன்னும் பின்னுமாக 50க்கும் மேற்பட்ட வேன்களில்வந்தனர். அதில் உருட்டுக் கட்டைகளும் இருந்தன. ராமதாசின் காருக்குக் கருப்புக் கொடி காட்டப்பட்டஇடங்களில் எல்லாம் இந்த வேன்களில் இருந்து குதித்து இறங்கிய பா.ம.கவினர் ரஜினி ரசிகர்களை நோக்கிப்பாய்ந்தனர்.
இதையடுத்து பல இடங்களில் ரஜினி ரசிகர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால், சில இடங்களில் திருப்பி சண்டைக்குப்பாய்ந்தனர். இதனால் அங்கெல்லாம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை சிறிது தூரத்தில் நின்றபடி ரசித்த போலீசார்மோதல் வலுக்கும் நிலை ஏற்பட்டபோது உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் கலைத்தனர்.
கே.உசிலம்பட்டி என்ற இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது.வேன்களில் இருந்து குதித்த ராமதாசின் ஆதரவாளர்கள் ரஜினி ரசிகர்கள் மீது சரமாறியாக கல்வீச்சு நடத்தினர்.இதையடுத்து ரசிகர்கள் தெறித்து ஓடினர். கல்வீச்சில் காளிதாஸ் என்ற ரசிகரின் மண்டை உடைந்தது. அவர்உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications