நடுக்கடலில் தமிழக மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு: இலங்கை மீனவர்கள் மீண்டும் தாக்குதல்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீது இலங்கைமீனவர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 6 தமிழக மீனவர்கள் காயமடைந்தனர்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்களும், கடற்படை வீரர்களும்அவ்வப்போது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம்பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள், இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டு வெட்டுக் காயம் அடைந்துள்ளனர்.
அடைக்கலம், ஜனார்த்தனன், கிரிஸ்டோஸ், ஞானஅருள், கிதர்சன், கனிஷ்டன் ஆகிய 6 மீனவர்களும் கடந்த சிலநாட்களாக கோடியக்கரை பகுதியில் தங்கி மீன் பிடித்தனர். திங்கள்கிழமை மாலை அவர்கள் கரைக்குத் திரும்பஆரம்பித்தனர்.
அப்போது இலங்கை மீனவர்கள் அங்கு வந்து தமிழக மீனவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். அரிவாள்களால்வெட்டினர். ஒருவழியாய் அவர்களிடம் இருந்து தப்பி இவர்கள் கரை சேர்ந்தனர்.
இதில் 6 பேரும் காயமடைந்தனர். கிரிஸ்டோஸ் மற்றும் கனிஷ்டன் ஆகியோருக்கு கையில் பலத்த காயம்ஏற்பட்டுள்ளது. இந்த இருவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications