ராகிங்: மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் டிஸ்மிஸ்
மதுரை:
ராகிங்கில் ஈடுபட்டு ஜூனியர் மாணவர்களை சித்திரவதை செய்த மதுரை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த 18மாணவர்கள் கல்லூரியில் இருந்து நிரந்தமாக நீக்கப்பட்டுள்ளனர்.
மதுரை சட்டக் கல்லூயில் புதிதாக சேர்ந்த ஜெயகார்த்திக், கண்ணபிரான், தனுஷ்கோடி ஆகிய 3 மாணவர்களை,சீனியர் மாணவர்கள் சிலர் ராகிங் செய்துள்ளனர். இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் மூன்று பேரும் புகார்செய்துள்ளனர்.
இதை அறிந்த சீனியர் மாணவர்கள் ஆத்திரமடைந்து, 3 மாணவர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.கத்தியாலும் குத்தி சித்திரவதை செய்தனர்.
இதில் காயமடைந்த 3 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாகதல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து கல்லூரி முதல்வர் விசாரணை நடத்தினார்.
இதன் இறுதியில் ராஜமோகன், ராஜேஷ், பொன்னுக்கிளி, அன்பழகன், அண்ணாதுரை, மகேந்திரபாண்டியன்,காசிமாயன், சஞ்சய் காந்தி, சிவராமன், சண்முகராஜா, கந்தசாமி, மூவேந்தன், செல்வக்குமரன், இளங்குமரன்,ஆரோக்கிய செல்வரமேஷ், தனுஷ்கோடி, இளையராஜா, அசோக் குமார் ஆகிய 18 மாணவர்களும் கல்லூரியைவிட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான உத்தரவை சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் பிறப்பித்துள்ளது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications