ஜெ.-வெங்கைய்யா நாயுடு சந்திப்பு
சென்னை:
அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து, தேர்தல் பிரச்சாரம் குறித்துஆலோசனை நடத்தினார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இதில் அதிமுக 33தொகுதிகளிலும், பா.ஜ.க. 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தொடர்பாக பா.ஜ.க.தரப்பில் அதிருப்தி நிலவுகிறது.
இந் நிலையில் வெங்கைய்யா நாயுடு ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 30நிமிடங்கள் நீடித்தது. தொகுதி பங்கீடு தொடர்பான பா.ஜ.கவினரின் அதிருப்தி குறித்தும், பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர்அத்வானி ஆகியோருடன் இணைந்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்வது குறித்தும், பிரச்சார வியூகம் குறித்தும் ஜெயலலிதாவுடன்ஆலோசனை நடத்தினார் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சென்னை வந்த வெங்கைய்யா நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில்அதிருப்தி நிலவுவது உண்மைதான்.
இப்போது அதிமுகவுடன் தேர்தல் உடன்பாடு மட்டுமே உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சேர்ப்பது குறித்துதேர்தலுக்குப் பின் முடிவு செய்யப்படும்.
மாநில கட்சித் தலைமைகளிடம் வரும் 5ம் தேதிக்குள் வேட்பாளர்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டுள்ளோம். வேட்பாளர்களைப்பரிசீலித்து 10ம் தேதியிலிருந்து 15ம் தேதிக்குள் அனைத்து மாநில பா.ஜ.க. வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்றுதெரிவித்தார். பேட்டியின்போது மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் ஆகியோர்உடனிருந்தனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications