அதிமுகவின் பிரசார பீரங்கி ஆவாரா கார்த்திக்?
சென்னை:
அதிமுகவுக்காக நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமைக் கழகத்திற்குச் சென்ற நடிகர் கார்த்திக், தான் அதிமுகவில் சேரவிரும்புவதாகக் கூறி அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனிடம் கடிதம் கொடுத்தார். ஆனால் இதுவரைகார்த்திக்கை கட்சியில் சேர்ப்பது குறித்து முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வாயேதிறக்காமல் உள்ளார்.
இதனால் சோர்ந்து போன கார்த்திக்கை, அவரது நெருங்கிய நண்பரும், நடிகரும், சைதாப்பேட்டை தொகுதிஅதிமுக எம்.எல்.ஏவுமான ராதாரவி சமாதானப்படுத்தி உள்ளார். என்னையும், எஸ்.எஸ்.சந்திரனையும் கட்சியில்சேர்ப்பதற்கு முன்பு இப்படித்தான் அம்மா சோதித்தார். ஆனால் கடைசியில் கட்சியில் சேர்த்துக் கொண்டார்.அதுபோல உங்களையும் சேர்ப்பார் என்று ராதாரவி கூறியுள்ளார்.
அத்தோடு நில்லாமல், மேடைப் பேச்சுக்கு கார்த்திக்கை அவர் தயார் செய்வதாகவும் கூறப்படுகிறது. வரும்நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்காக கார்த்திக் மேடையேறி பிரசாரம் செய்யலாம் என்று தெரிகிறது.அதற்கேற்ற வகையில் கார்த்திக் பல்வேறு அரசியல் தலைவர்களின் வரலாறுகளைப் படிக்க ஆரம்பித்து விட்டார்.எப்படிப் பேசுவது என்பதையும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.
ஜெயலலிதா இன்னும் சம்மதம் கொடுக்காவிட்டாலும் கூட, கார்த்திக்கை கட்சியில் சேர்க்கவும், பிரசாரத்திற்குப்பயன்படுத்தவும் சசிகலா பச்சைக் கொடி காட்டி விட்டதாகவே கூறுகிறார்கள்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications