தமிழகத்தில் மே 10ல் மக்களவை தேர்தல்
டெல்லி: :
நாடாளுமன்றத் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இன்று அறிவித்தார். 4கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மே 10ம் தேதி வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதிகளை இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்திஅறிவித்தார். அதன்படி ஏப்ரல்20ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கிறது 2வது கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும்,3வது கட்டமாக மே 5ம் தேதியும், கடைசி மற்றும் 4வது கட்டமாக மே 10ம் தேதியும் வாக்குப் பதிவு நடக்கிறது.
முதல் கட்டத் தேர்தலில் 16 மாநிலங்களில் உள்ள 141 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டத் தேர்தலில் 17மாநிலங்களில் உள்ள 137 தொகுதிகளுக்கும், 3வது கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 83 தொகுதிகளுக்கும்வாக்குப் பதிவு நடைபெறும்.
4-வது கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.அன்றே மங்களூர் சட்டசபை இடைத் தேர்தலும் நடத்தப்படும் என்றும் கிருஷ்ணமூர்த்தி அறிவித்தார். மே 13ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் ஒரிஸ்ஸா மாநில சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 20 மற்றும் 26ம் தேதிகளில் இருகட்டமாக நடைபெறுகிறது. சிக்கிம் சட்டசபைக்கு மே 10ம் தேதி ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்குவருவதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்துத் தரப்பினரும் மிகக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும்அவர் எச்சரிக்கை விடுத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications