ஒத்திபோடப்பட்ட ஜெவின் பிரச்சாரம் 9ம் தேதி தொடக்கம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வரும் 9ம் தேதி தேனாம்பேட்டையில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்குகிறார்.முன்னதாக 1ம் தேதி அவர் பிரச்சாரம் தொடங்க இருந்தார்.
ஆனால், கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. வேட்பாளர்களைத் தேடிக் கொண்டிருந்ததால் பயணத்தை ஒத்தி வைத்தார்.5ம் தேதிக்குள் பா.ஜ.கவும் வேட்பாளர்களை முடிவு செய்துவிடும் என்று கூறப்பட்டுள்ளதால் தனக்கு ராசியான 9ம்தேதி முதல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் ஜெயலலிதா.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வருகிற 9ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை தேர்தல்பிரச்சார சுற்றுப் பிரயாணம் செய்யவுள்ளார். சுற்றுப் பயண விவரம்:
மார்ச் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை வட தமிழ்நாட்டில் உள்ள மதுராந்தகம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காவேரிப்பட்டினம், சேலம் ஆகிய இடங்களிலும்,
மார்ச் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, சத்தியமங்கலம், கோவை, அவினாசி,பொள்ளாச்சி, கோபிச்செட்டிபாளையம், பழனி, கரூர் ஆகிய இடங்களிலும்,
மார்ச் 27 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை பெரம்பலூர், திண்டிவனம், விழுப்புரம், திருவள்ளூர், தென் சென்னை, மத்தியசென்னை, வட சென்னை ஆகிய இடங்களிலும்,
ஏப்ரல் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை புதுவை, கடலூர், சிதம்பரம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி,திண்டுக்கல், தேனி, பெரியகுளம், திருமங்கலம், மதுரை ஆகிய இடங்களிலும்,
ஏப்ரல் 22ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை ராமநாதபுரம், காரைக்குடி, விருதுநகர், சிவகாசி, தென்காசி,திருநெல்வேலி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமாரி ஆகிய இடங்களிலும்,
மே 6,7,8 தேதிகளில் மீண்டும் தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை தொகுதிகளிலும் ஜெயலலிதாபிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications