ஆடு, கோழி பலிக்கு தடை கோருகிறார் நீதிபதி கற்பகவிநாயகம்
சென்னை:
கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிட விதிக்கப்பட்டிருந்த தடையை தமிழக அரசு நீக்கியிருக்கக் கூடாது.மீண்டும் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம் கூறியுள்ளார்.
பரபரப்பான தீர்ப்புகளால் பிரபலமடைந்த நீதிபதி கற்பகவிநாயகம், சில மாதங்களுக்கு முன்பு ஜனனியின் ஜாமீன்மனு தொடர்பான விசாரணையின்போது பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து திமுக தலைவர்கருணாநிதியைக் கடுமையாக விமர்சித்த அவர் அதிமுக அரசை வெகுவாகப் பாராட்டினார்.
இந் நிலையில், நேற்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கோவில்களை கொலைக் களமாகஆக்கக் கூடாது. பூசாரிகளின் நெருக்குதலுக்கு அடிபணிந்து, ஆடு, கோழி பலிக்குத் தடையை நீக்கியது சரியானசெயல் அல்ல.
அரசின் முடிவு, என்னைப் போன்ற அமைதி விரும்பும், ஆன்மீக உணர்வுள்ளவர்களை புண்படுத்தி விட்டது.அகிம்சை மீது நம்பிக்கையுள்ளவர்கள், விலங்குகளின்பால் அன்பு கொண்டவர்கள், அரசின் முடிவை மாற்றக்கோரி முயற்சி எடுக்க வேண்டும்.
இது மகாத்மா காந்தி அவதரித்த பூமி. இங்கு இம்சை இருக்கக் கூடாது. திருவள்ளுவர், ராமலிங்க அடிகளார்,பாரதியார் ஆகியோரின் தீவிர பக்தன் நான். அப்படிப்பட்ட நிலையில் ஆடு, கோழி பலியை என்னால் ஏற்கமுடியவில்லை.
எனவே, மக்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு தடையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசைகேட்டுக் கொள்கிறேன் என்றார் கற்பகவிநாயகம்.












Click it and Unblock the Notifications