திமுக வேட்பாளர் பட்டியல்: கருணாநிதி அறிவித்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் மக்களவைத் தேர்தலில் 15 இடங்களில் போட்டியிடும் திமுக தனது வேட்பாளர் பட்டியலை இன்றுவெளியிட்டது.

அக் கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின் விவரம்:

1. தென் சென்னை- முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு

2. மத்திய சென்னை- தயாநிதி மாறன் (மறைந்த முரசொலி மாறனின் மகன்- கருணாநிதியின் பேரன்)

3. வட சென்னை- செ.குப்புசாமி (திமுகவின் தொழிற்சங்கத் தலைவர்)

4. திருச்செந்தூர்- ராதிகா செல்வி (போலீஸ் எண்கெளன்டரில் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின்மனைவி)

5. கிருஷ்ணகிரி- சுகவனம் (1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பர்கூர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவைதோற்கடித்தவர்)

6. புதுக்கோட்டை- ரகுபதி (முன்னாள் அதிமுக அமைச்சர்)

7. திருப்பத்தூர்- வேணுகோபால்

8. கடலூர்-வெங்கடபதி

9. திருச்செங்கோடு- சுப்புலட்சுமி ஜெகதீசன்

10. கரூர்-பழனிச்சாமி

11. பெரம்பலூர்- முன்னாள் மத்திய அமைச்சர் எச்.ராஜா

12. நாகப்பட்டிணம்- விஜயன்

13. ராமநாதபுரம்-பவானி ராஜேந்திரன்

14. ஸ்ரீபெரும்புதூர்- கிருஷ்ணசாமி

15. தஞ்சாவூர்- பழனி மாணிக்கம்

கடந்த முறை போட்டியிட்டு எம்.பியான 10 பேரில் (மறைந்த மாறன் தவிர்த்து) 7 பேருக்கு மீண்டும் சீட்கொடுத்துள்ளார் கருணாநிதி.

ஆனால், கூடலூரில் வென்ற ஆதி சங்கர், கிருஷ்ணகிரியில் வெற்றி பெற்ற வெற்றிச் செல்வன், திருச்செந்தூர்தொகுதியில் போட்டியிட்டு எம்.பியான ஜெயசீலன் ஆகிய மூவருக்கு மட்டும் இம்முறை சீட் தரப்படவில்லை.

ஆதிசங்கர் மீது ஸ்டாலின் அதிருப்தியில் இருந்ததால் சீட் கிடைக்கவில்லை. திருச்செந்தூரை பண்ணையாரின்மனைவி ராதிகாவுக்கு தர முடிவானதால் ஜெயசீலனுக்கு சீட் கிடைக்காமல் போய்விட்டது. ஜெயலலிதாவைத்தோற்கடித்த சுகவனத்தை கிருஷ்ணகிரியில் நிறுத்த ஸ்டாலின் ஒற்றைக் காலில் நின்றதால் அவருக்கு லாட்டரிஅடித்துள்ளது.

புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் ரகுபதி, ஜெயலலிதாவிடம் அமைச்சராக இருந்து திமுகவுக்குத்தாவியவர். அந்தத் தொகுதியின் எம்.பியும், பா.ஜ.க. மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசருக்கும்நெருக்கமானவர். இதனால் புதுக்கோட்டை தொகுதியை தனக்குக் கிடைக்காமல் செய்த ஜெயலலிதாவுக்கு பாடம்புகட்ட திருநாவுக்கரசர் தனது ஆதரவாளர்களை ரகுபதிக்கு ஆதரவாக மறைமுகமாக இறக்கிவிடுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

15 வேட்பாளர்களில் ராதிகா செல்வி, சுப்புலட்சுமி ஜெகதீசன், பவானி ராஜேந்திரன் என 3 பெண்களைநிறுத்தியுள்ளார் கருணாநிதி. இதன்மூலம் 33 சதவீத இட ஒதுக்கீட்டையும் கடைபிடித்துள்ளார். இதில் ராதிகா செல்விநிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் குழந்தைபிறக்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+