ரஜினி-விஜய்காந்த் ரகசிய சந்திப்பு: ராமதாசுக்கு பாடம் புகட்ட திட்டம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

நடிகர்கள் ரஜினிகாந்தும் விஜய்காந்தும் வரும் மக்களவைத் தேர்தல் குறித்து ஹைதரபாத்தில் தனியே சந்தித்துரகசிய ஆலோசனைகள் நடத்தியுள்ளனர்.

இருவருமே நேற்று ஒரே விமானத்தில் ஹைதராபாத் சென்றனர். பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள 5 நட்சத்திரஹோட்டலில் இருவருக்கும் அடுத்தடுத்த அறைகள் புக் செய்யப்பட்டிருந்தன.

ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து தனித்தனி கார்களில் ஹோட்டலுக்குச் சென்றனர். முதலில் ரஜினிசென்றுவிட, அடுத்ததாக விஜய்காந்த் தனது அறைக்குப் போனார்.

இதையடுத்து ரஜினியின் அறையில் இருவரும் ஆலோசனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் பேசியதாகத்தெரிகிறது.

சினிமாவுக்கு இளைஞர்கள் அடிமையாகி சீரழிந்து வருவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறி வருகிறார்.குறிப்பாக ரஜினியும் விஜய்காந்த்தும் ரசிகர் மன்றங்கள் என்ற பெயரில் இளைய தலைமுறையை குட்டிச்சுவராக்கிவருவதாக குற்றம் சாட்டி வருகிறார்.

விஜய்காந்த் ரசிகர் மன்றத்தில் வன்னிய இளைஞர்கள் பெருமளவில் இருப்பதால், அவர்களை அதிலிருந்து விலகிவரச் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் ரஜினியும் விஜய்காந்தும் ராமதாஸ் மீது கடுப்பில்உள்ளனர்.

இந் நிலையில் தேர்தல் நெருங்குவதையடுத்து ரஜினி எதிர்ப்பு விஷயத்தில் ராமதாஸ் அடக்கி வாசிக்கஆரம்பித்துள்ளார். ஆனால், பா.ம.க. எதிர்ப்பில் ரஜினி வேகம் காட்ட ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் சேலத்தில் ராமதாசின் எதிரியான ஜெகத்ரட்சகனின் வீர வன்னியர் பேரவை நடத்திய மாநிலமாநாட்டுக்கு ரஜினி வாழ்த்துச் செய்தி அனுப்பினார். அந்தச் செய்தி மாநாட்டில் வாசிக்கப்படுவதையும், அதற்குகூட்டத்தில் எழுந்த ரீயாக்ஷனையும் சென்னையில் இருந்த ரஜினிக்கு செல்போனில் நேரடியாக ரிலேசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் ரஜினியும் விஜய்காந்த்தும் சந்தித்துப் பேசியது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

தேர்தலில் பா.ம.கவை தோற்கச் செய்ய தங்களது ரசிகர்களை கூட்டாக இறக்கி விடுவது குறித்து இருவரும்ஆலோசித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே ரஜினிக்காக தெலுங்கு இயக்குனர் தேஜா உருவாக்கிய நதிகள் இணைப்பை மையமாகக் கொண்டதிரைக் கதையை படமாக எடுக்க ரஜினி விரும்பவில்லை. அதில் ஏகப்பட்ட அரசியலை சேர்க்க வேண்டியிருக்கும்என்பதால் ரஜினி யோசிப்பதாகத் தெரிகிறது.

ஆனால், அந்த சப்ஜெக்டில் விஜய்காந்த் ஆர்வமாக இருப்பதாகவும், ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையைதனக்கு தருமாறும் தேஜாவிடம் விஜய்காந்த் பேசியுள்ளார். அது குறித்தும் ரஜினியும் விஜய்காந்துக்கும்ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்றும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+