மதுரையில் சு.சுவாமி மீண்டும் தனித்துப் போட்டி
சென்னை:
வரும் மக்களவைத் தேர்தலில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மீண்டும் மதுரையில்போட்டியிடுகிறார். மற்ற தொகுதிகளில் ஜனதா கட்சி, அதிமுகவை ஆதரிக்கும் என்றும் சுவாமி அறிவித்துள்ளார்.
1996ம் ஆண்டுத் தேர்தலில் அதிமுக ஆதரவுடன் மதுரையில் போட்டியிட்டு சுவாமி வென்றார். ஆனால், கடந்ததேர்தலில் திமுகவும் அதிமுகவும் இவரைக் கழற்றிவிட்டன. இதனால் தனித்துப் போட்டியிட்ட சுவாமி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பா.மோகனிடம் தோற்றார்.
இந் நிலையில் வரும் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மோகன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துஅதிமுக சார்பில் போஸ் போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் எப்படியாவது இடம் பிடித்துவிட பிரம்மப் பிரயத்தனம் செய்து தோற்றுப் போன சுவாமிகடந்த தேர்தலைப் போலவே தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இன்று சென்னையில் நிருபர்களிடம் சுவாமி இதனைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
நான் மதுரையில் போட்டியிடுகிறேன். இதனால் மதுரையில் அதிமுக வேட்பாளரை எதிர்க்கிறோம். மற்ற 31இடங்களிலும் அதிமுக வேட்பாளர்களை எங்கள் கட்சி ஆதரிக்கும். ஆனால், பெரியகுளத்தில் போட்டியிடும்சசிகலா கும்பலைச் சேர்ந்த டி.டி.வி. தினகரனுக்கு எங்கள் ஆதரவு இருக்காது.
அவர் ஒரு வெளிநாட்டுக்காரர். சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றுத் தயாராக வைத்துள்ளவர் தினகரன். இதனால்அவர் போட்டியிடுவதை தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும்.
மதுரையில் வரும் 20ம் தேதி முதல் எனது பிரச்சாரத்தை ஆரம்பிப்பேன். ராஜிவ் கொலையில் திமுகவை ஜெயின்கமிஷன் தனது இறுதி அறிக்கையில் விடுவித்ததாகக் கூறுவது பெரும் தவறு. அந்தக் கொலையில் திமுகவுக்குதொடர்புண்டு என்றார் சு.சுவாமி.












Click it and Unblock the Notifications