முதல்வர், அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகள்
சென்னை:
தேர்தல் பிரசாரத்தின்போது அரசு அதிகாரிகளையோ, அரசு வாகனங்களையோ முதல்வர் மற்றும் அமைச்சர்கள்பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு மத்திய தேர்தல் ஆணையம் பல்வேறு அனுப்பியுள்ளஉத்தரவுகளின் விவரம்:
புதிய திட்டங்கள் எதையும் முதல்வரோ, அமைச்சர்களோ துவக்கி வைக்கக் கூடாது. இயற்கை சீரழிவு ஏற்பட்டால்ஒழிய முதல்வர், அமைச்சர்கள் எந்த நிவாரணத் திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது.
அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள், அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது. தேர்தல்பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது.
தேர்தல் பணிகளில் தங்களது ஊழியர்களையும், அரசு கார்கள் போன்ற அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தக்கூடாது. அரசுக்குச் சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களை பயன்படுத்தக் கூடாது.
தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு அலுவலர்களை தங்களது அறைக்கு அழைத்து அமைச்சர்கள் பேசக்கூடாது. அதேபோல, அமைச்சர்கள் தங்களது பகுதிக்கு வந்தால், அவர்களை மரியாதை நிமித்தமாகக் கூட தேர்தல்பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் சந்திக்கக் கூடாது.
தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் இன்றி தேர்தல் தொடர்பான அதிகாரிகளை மாற்றம் செய்யக்கூடாது.மாவட்டங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் முதல்வரை கலெக்டர்கள் வரவேற்கக் கூடாது.
அரசினர் விருந்தினர் விடுதி, அரசினர் ஓய்வு இல்லங்கள், பொது மைதானங்கள் ஆகியவற்றை ஆளுங்கட்சியினர்மட்டுமே பயன்படுத்தக் கூடாது. அனைத்துக் கட்சியினருக்கும் அவற்றை உபயோகப்படுத்துவதில் சம பங்குஅளிக்கப்பட வேண்டும்.
அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்களை தேர்தல் ஏஜெண்டுகளாக நியமிக்கக் கூடாது. தேர்தலில் நிற்கவோ,வாக்களிக்கவோ தகுதியில்லாத நபர்களைத் தேர்தல் ஏஜெண்டகளைகளாக வேட்பாளர்கள் நியமிக்கக் கூடாது.தேர்தல் ஏஜெண்டகள் செய்யும் தவறுகளுக்கு வேட்பாளரே பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு கடுமையான பல்வேறு கட்டுப்பாடுகளை அரசுக்கும், அமைச்சர்களுக்கும் தேர்தல் ஆணையம்பிறப்பித்துள்ளது.
நம்மவர்கள் இதையெல்லாம் மதிப்பார்களா?
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications