தனியார் இடங்களில் தேர்தல் விளம்பரப் பலகைகள் வைக்க தடை
சென்னை:
அரசு மற்றும் தனியார் இடங்களில் தேர்தல் விளம்பரப் பலகைகளை வைக்கக் கூடாது என்று தமிழகத் தலைமைத்தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி தடை விதித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனியார் சுவர்களிலும், இடங்களில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரங்களைஅரசியல் கட்சியினர் எழுதி வருவதாக பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
தனியார் சுவர்களில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரங்களை எழுதக் கூடாது. அவ்வாறு செய்தால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, அரசு சுவர்களிலும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது.
தேர்தல் விளம்பரப் பலகைகளைப் பொருத்தவரை, தனியார் இடங்களில், அவர்களே அனுமதி கொடுத்தாலும் கூடவிளம்பரப் பலகைகளை வைக்கக் கூடாது. மீறி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற விதிமீறல்கள் குறித்துப் புகார் தெரிவிக்க விரும்புவோர் தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத்தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் புகார்ப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
அங்கு வந்து தங்களது புகார்களை சமர்ப்பிக்கலாம். புகார் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்என்று தெரிவித்துள்ளார் சாரங்கி.
இதற்கிடையே மாநிலம் முழுவதும் தனியார், அரசு சுவர்களைப் பிடிக்க அனைத்துக் கட்சிகள் இடையே போட்டாபோட்டி நடந்து வருகிறது. பல இடங்களில் அடிதடியும் நடக்கிறது.
தங்களது சுவர்களை நாறடிக்கும் கரைவேட்டிளை தட்டிக் கேட்டால் தேவையில்லாத பிரச்சனை வரும் என்பதால்பெரும்பாலான பொது மக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications