பிரபாகரனின் பொது மன்னிப்பை நிராகரித்த கருணா
கொழும்பு:
தனக்கு பொது மன்னிப்பு வழங்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் திட்டத்தை கருணாநிராகரித்துள்ளார்.
புலிகள் இயக்கத்தில் பிளவை ஏற்படுத்தியுள்ள கிழக்குப் பகுதி தளபதியான கருணாவுக்கு பொது மன்னிப்புவழங்குவதாக, மட்டக்களப்பு பகுதி பிஷப் கிங்ஸ்லி சாமிப்பிள்ளை மூலமாக பிரபாகரன் தகவல் அனுப்பினார்.
இதன்படி புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா விலகிக் கொள்ளலாம், குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம், ஆனால்அரசியலில் ஈடுபடக் கூடாது, மற்றும் புலிகள் இயக்கத்தில் தலையிடக் கூடாது என்று சமரசத் திட்டம்முன்மொழியப்பட்டது.
ஆனால், இந்த மன்னிப்புத் திட்டத்தை ஏற்க முடியாது என கருணா கூறியுள்ளார். தனது செய்தித் தொடர்பாளர்வரதன் மூலமாக கருணா வெளியிட்டுளள செய்தியில்,
தன்னை இயக்கத்தில் இருந்து நீக்கிய புலிகள் வழங்கும் எந்தவிதமான மன்னிப்பையும் ஏற்க கருணா தயாராகஇல்லை என்று கூறியுள்ளார்.
இரு தரப்புக்கும் சமாதானம் ஏற்படுத்த பிஷப் கிங்ஸ்லி சாமிப்பிள்ளை முதலில் கருணா தரப்பை சந்தித்துவிட்டுபின்னர் கிளிநொச்சிக்குச் சென்று புலிகள் இயக்க அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனைச் சந்தித்தார்.
அப்போது தான் பொது மன்னிப்பு திட்டத்தை புலிகள் முன் வைத்தனர்.
இதற்கிடையே பிரபாகரனின் தலைமையில் ஒன்று திரளுமாறு மட்டக்களப்பு பகுதி புலிகளுக்கும் மக்களுக்கும்புலிகளின் முக்கியப் பிரமுகரான கரிகாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே போல திருகோணமலை கமாண்டரான பதுமனை புலிகளின் தலைமை சிறை வைத்துள்ளதாக கருணாதரப்பினர் புரளியை கிளப்பி விட்டுள்ளனர். இதனை புலிகள் இயக்கம் பதுமன் மூலமாகவே மறுத்துள்ளது.
இதற்கிடையே கருணாவைக் கொல்ல அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகளை தங்களது வீரர்கள் சுட்டுக்கொன்றுள்ளதாகவும் அவரது தரப்பினர் கூறுகின்றனர். புலிகள் அமைப்புடன் சமாதானப் போக வேண்டுமானால்அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன், நிதித்துறை தலைவர் தமிழேந்தி, காவல்துறை தலைவர் நடேசன்ஆகியோரை நீக்க வேண்டும் என 3 நிபந்தனைகளை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதை புலிகள் இயக்கம் ஏற்காது என்று தெரிகிறது.
மேலும் புலிகளின் கோடிக்கணக்கான நிதியில் கருணா கையாடல் செய்துள்ளதாகவும், அதை மறைக்கவே அவர்இந்த பிரபாகரன் எதிர்ப்பு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications