தேர்தல் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து திமுக வேட்பாளருக்கு விலக்கு
சென்னை:
சைதாப்பேட்டை இடைத் தேர்தலின்போது நடந்த மோதல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில்ஆஜராவதிலிருந்து புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இடைத் தேர்தலின்போது திமுகமற்றும் அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்ரகுபதி, மிசா பாண்டியன், கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட 6 பேர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
சைதை 23-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கல்யாணசுந்தரம்என்பவரைத் தவிர மற்ற யாரும் ஆஜராகவில்லை. மாறாக ரகுபதி சார்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டியுள்ளதாகவும், எனவே மே 10ம் தேதி வரை தன்னால் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்க முடியாதுஎன்றும், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறும் அவர் கோரியிருந்தார்.
இதை ஏற்ற நீதிபதி, ரகுபதி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். மே 18ம் தேதிக்குவிசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications