திருச்சி: 3 பள்ளிகளில் வெடிகுண்டு வெடித்ததாக புரளி- பெற்றோர்கள் பீதி
திருச்சி:
திருச்சியில் இன்று 3 பள்ளிகளில் வெடிகுண்டு வெடித்ததாக வதந்தி பரவியது. இதனால் மாணவர்களின் பெற்றோர்பள்ளியை முற்றுகையிட்டு, தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.
திருச்சி கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ளது சேவா சங்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளி. இங்கு 700க்கும் மேற்பட்டமாணவிகள் படிக்கிறார்கள். 100 பேர் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். இன்று காலை பள்ளியின்தலைமையாசிரியைக்கு ஒரு மாணவியின் தந்தை போன் செய்து, பள்ளியில் வெடிகுண்டு வெடித்ததாக தகவல்வந்துள்ளது. என் மகளின் கதி என்ன என்று கேட்டுள்ளார்.
தலைமையாசிரியை, அவ்வாறு குண்டு எதுவும் வெடிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அந்தத் தகவல்திருச்சி எங்கும் பரவியது. பெற்றோர்கள் பலரும் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளியின் கேட் வழக்கம்போல்பூட்டியிருக்கவே காவலாளியிடம் இது குறித்து கேட்டுள்ளனர்.
காவலாளி பதில் சொல்ல முடியாமல் திணறவே, பள்ளி ஆசிரியார்கள் வந்து, இது வெறும் வதந்தி என்று சமாதானம்கூறியுள்ளனர்.
இதற்கிடையே வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும்கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பெற்றோர்கள் சமாதானமாகாமல் தங்களது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சென்று விட்டனர்.
நாளை பிளஸ் டூ தேர்வு இருப்பதால் அந்த வகுப்பு மாணவிகளை மட்டும் அனுப்ப ஆசிரியர்கள் மறுத்துவிட்டனர்.இதனையடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதேபோல் திருச்சி பாலக்கரை பகுதியில் இரு மேல்நிலைப் பள்ளிகளிலும் வெடிகுண்டு வெடித்ததாக தகவல்பரவியது. அங்கும் பெற்றோர்கள் சென்று தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர்.வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பள்ளிகளிலும் சோதனை நடத்தினர். அங்கும் வெடிகுண்டு எதுவும்கண்டுபிடிக்கப்படவில்லை.
சேவா சங்கம் பள்ளியில் வெடிகுண்டு புரளி வருவது இது 3வது முறையாகும். 3 முறையும் தேர்வு நேரத்தில்தான்இத்தகைய வதந்தி கிளம்பியுள்ளது. இப்பள்ளியில் தேர்வுகளுக்கு ஸ்டடி லீவ் விடப்படமாட்டாது. எனவே,விடுமுறை வேண்டியே மாணவிகளில் யாராவது ஒருவர் தனது நண்பர்கள் மூலம் இத்தகைய புரளியைக்கிளப்பியருக்கக்கூடும் என்று போலீஸார் கருதுகின்றனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications