லெஸ்பியன் உறவு: திருமண சான்றிதழ் கோரும் 2 அமெரிக்க தமிழ்ப் பெண்கள்
வாஷிங்டன்:
திருமணம் செய்து கொண்டுள்ள இரு லெஸ்பியன் பெண்கள், தங்களுக்குத் திருமணச் சான்றிதழ் கோரி அமெரிக்கநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இருவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு திருமணச் சான்றிதழ் தர வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள கிங் கெளண்ட்டி பதிவகம்மறுத்ததையடுத்து நீதிமன்றத்தில் அவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ்ப் பெண்களான வேகவாஹினி சுப்பிரமணியமும் (வேகா)வைஜெயந்திமாலா நாகராஜனும் (மாலா) 1996ம் ஆண்டு இணைய தளம் மூலம் சந்தித்துக் கொண்டனர்.இருவருமே தமிழர்கள் என்பதால் முதலில் நெருங்கிப் பழகியதாகவும், பின்னர் இருவருக்குமே ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் இருந்ததால் காதலிக்க ஆரம்பித்தாகவும் கூறுகின்றனர்.
திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த இருவரும் ஒலிம்பியா நகரத்திலிருந்து சியாட்டில் நகரத்துக்கு 2000ம்ஆண்டு குடிபெயர்ந்தனர். அங்கு ஒரு வீட்டை வாங்கி இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந் நிலையில் 2002ம் ஆண்டு இருவரும் இந்து மதப்படி புரோகிதரை வைத்துத் திருமணம் செய்து கொண்டனர்.ஆனால், முறைப்படி தங்களை தம்பதிகளாக அங்கீகரித்து திருமணச் சான்றிதழ் அளிக்கும்படியும்விண்ணப்பித்தனர்.
அமெரிக்க சட்டப்படி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை தாங்களும் பெறவிரும்புவதாக விண்ணப்ப மனுவில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இவர்களின் கோரிக்கையை கிங் கெளண்டிபதிவகம் நிராகரித்துவிட்டது.
இதனையடுத்து தங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கூறி, அமெரிக்க அரசுக்கு எதிராகவாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இதில் வேகா, தெற்காசிய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்கும் ஒரு சமூக நலஅமைப்பிலும், மாலா ஒரு சாப்ட்வேர் என்ஜினராவார்.
சமீபகாலமாக அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கை திருமணங்கள் அதிகரித்து வருவதும், அது குறித்து அமெரிக்கஅதிபர் ஜார்ஜ் புஷ் கவலை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. லெஸ்பியன் உறவின் இரு தமிழ்ப் பெண்களும்சிக்கியிருப்பதும், அதை அவர்கள் வெளிப்படையாகவே சொல்லி வழக்குப் போட்டுள்ளதும் பெரும் அதிர்ச்சியைத்தருகிறது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications