கார், நகை, பணத்தை திரும்பக் கேட்கிறார் கஞ்சா ஜனனி
மதுரை:
போலீஸார் தன்னிடமிருந்து பறிமுதல் செய்த மிட்சுபிஸி லேன்சர் கார், நகைகள், ரூ. 18,000 பணம் ஆகியவற்றைதிரும்ப ஒப்படைக்கக் கோரி மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் சசிகலாவின் கணவர் நடராஜனின்தோழி ஜனனி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த ஜனனி, அவரது தாயார் ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோரை கடந்த ஆண்டு மதுரைகருப்பாயூரணி போலீஸார் கஞ்சா வழக்கில் கைது செய்தனர்.
சமீபத்தில் ஜனனியும், ரமீஜாவும் ஜாமீனில் விடுதைல செய்யப்பட்டனர். அதேபோல சதீஷுக்கும் மதுரைபோதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீன் பணத்தைக் கட்ட யாரும் முன் வராதகாரணத்தால் அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.
இந் நிலையில், ஜனனி மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், போலீஸார் எனது வீட்டிலிருந்து கைப்பற்றியதாகக் கூறும் ரூ. 1.40 கோடி பணம் நெல்லையைச் சேர்ந்தஜமீன்தாரான தொழிலதிபர் ஜெகதீஷ் ராஜாவிடம் ஒப்படைக்க வேண்டும். அது அவருடைய பணம். மீதமுள்ள ரூ.18,000 பணம் என்னுடையது. அதை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதேபோல போலீஸார் பறிமுதல் செய்துள்ள எனக்குச் சொந்தமான 21 பவுன் நகைகள், கார் ஆகியவற்றையும்திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் ஜனனி.
ஜனனியிடம் 21 பவுனுக்கும் அதிகமான நகைகள் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றை தமிழக அதிகாரமையத்தின் நம்பர் டூ லவட்டிவிட்டதாகத் தெரிகிறது. கணக்கில் காட்டப்பட்ட நகைகள் மட்டுமே 21 பவுன்என்கிறது உள் வட்டாரம்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications