அரசியல்வாதிகளுக்கு தேர்தல் கமிஷன் மேலும் ஒரு தடை
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால், அரசியல் தலைவர்களை வைத்து அரசு சார்பிலானவிழாக்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழகதலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சாரங்கி அனுப்பியுள்ள உத்தரவில், மாவட்ட வளர்ச்சிக் கழகக் கூட்டம், ஜில்லா கூட்டம், பஞ்சாயத்துக் கூட்டம்ஆகியவற்றுக்கு அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளை அழைக்கக் கூடாது.
இந்தக் கூட்டங்களுக்கு மூத்த அதிகாரிகள் மட்டுமே தலைமை தாங்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசியல்சம்பந்தப்பட்டவர்கள் கூட்டங்களுக்கு வரக் கூடாது.
வறட்சி போன்ற முக்கியப் பிரச்சினைகளை விவாதிக்க மட்டுமே இக்கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும். நிதி ஒதுக்கீடு, புதியதிட்டங்களை அறிவிப்பது ஆகியவை கூடவே கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications