புதுவை: பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக களம் இறங்கும் கண்ணன்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

புதுவை பா.ம.க. வேட்பாளர் பேராசிரியர் ராமதாஸுக்கு ஆதரவாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப.கண்ணன் தீவிரப் பிரசாரத்தில்ஈடுபடவுள்ளார்.

புதுவை காங்கிரஸ் தரப்பிலிருந்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக பகிரங்கமாகவெளியிட்டுள்ள முதல் கருத்து இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவை தொகுதியை தங்களுக்கு ஒதுக்காததால் மிகவும் அதிருப்தியுடன் இருந்து வந்தனர் காங்கிரஸார். பா.ம.கவுக்கு ஆதரவு தரமாட்டோம் என்று கூறி வந்தனர். ஆனால் புதுவையில் காங்கிரஸ் போட்டியிடாது என்று கட்சி மேலிடம் அறிவித்து விட்டது.

இதையடுத்து கட்சி மேலிட முடிவை ஏற்பதாக காங்கிரஸ் தலைவர்கள கூறியிருந்தனர். இருப்பினும் பா.ம.கவுக்கு ஆதரவாகப்பிரச்சாரம் செய்வது குறித்து புதுவை காங்கிரஸார் சப்தம் காட்டாமல் இருந்து வருகிறார்கள்.

இந் நிலையில் புதுவையின் "புரட்சித் தலைவர்" ப.கண்ணன் பேராசியர் ராமதாஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். தீவிரப்பிரச்சாரத்தில் இறங்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ராமதாஸ், கண்ணன் வீட்டுக்குச் சென்று அவரது ஆதரவைக் கோரினார். அப்போது ராமதாஸுக்காக தீவிரப் பிரச்சாரத்தில்இறங்கப் போவதாக கண்ணன் உறுதியளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கண்ணன் பேசுகையில், புதுவை தொகுதிகாங்கிரஸுக்குக் கிடைக்காததில் வருத்தம்தான்.இருந்தாலும் அதை மறந்து விட்டு பா.ம.க. வேட்பாளரின் வெற்றிக்காக தீவிரமாகபிரச்சாரம் செய்யப் போகிறேன்.

பேராசியர் ராமதாஸ் எனது நெருங்கிய நண்பர். இந்த முறை இருவரும் சேர்ந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்துள்ளதுமகிழ்ச்சியைத் தருகிறது. அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து அவர்களை சமாதானப்படுத்தப் போகிறேன்.அனைவரும் ஒன்று சேர்ந்து ராமதாஸுக்காக பிரச்சாரம் செய்வோம் என்றார் கண்ணன்.

பாமகவின் க்கிய ஓட்டு வங்கியான வன்னியர் சதாயத்தைச் சேர்ந்தவர் ப.கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+