வெற்றி களிப்பில் லலிதா குமாரமங்கலம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள லலிதா குமாரமங்கலம் இப்போதே வெற்றி பெற்றுவிட்டதாக வெற்றிக் களிப்புடன் காணப்படுகிறார்.
பாண்டிச்சேரியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஒரு முனையில் பா.ம.க. வேட்பாளர் பேராசிரியர் ராமதாஸ்நிற்கிறார். மறு முனையில் பா.ஜ.க. சார்பில் எதிர்பார்க்கப்பட்டது போலவே லலிதா குமாரமங்கலம்அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கிடையே நேரடிப் போட்டி போலத் தெரிந்தாலும், பா.ம.க. வேட்பாளருக்கு இன்னொரு எதிரியும்இருக்கிறார். அதுதான் காங்கிரஸ். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தனக்கு சீட் கிடைக்காத ஆத்திரத்தில் உள்ளது.மேலிட உத்தரவு காரணமாக வேறு வழியின்றி அமைதியாக இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுபா.ம.கவுக்கு முழுமையாக இருப்பது போலத் தெரியவில்லை.
பா.ம.கவுக்கு ஆதரவாக இதுவரை காங்கிரஸ் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை.புதுவை கண்ணன் மட்டுமே ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். மற்றவர்கள் அனைவரும் கப் சிப்என்று உள்ளனர்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கும் பா.ம.கவுக்கு நேர் மாறாக பா.ஜ.க. உள்ளது. லலிதாகுமாரமங்கலத்திற்கும், பாண்டிச்சேரிக்கும் இடையே நேரடித் தொடர்பு இல்லை. என்றாலும் கூட அவரது தந்தைமோகன் குமாரமங்கலத்துக்கு பாண்டிச்சேரி மக்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது.
மோகன் குமாரமங்கலம் பாண்டிச்சேரியிலிருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர். பின்னர் மத்தியஅமைச்சராகவும் உயர்ந்தவர். தந்தை பாண்டிச்சேரியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் என்ற எண்ணம் தனதுவெற்றிக்கு உதவியாக இருக்கும் என்று லலிதா நம்புகிறார்.
அத்தோடு, அவரது கணவரும் பாண்டிச்சேரியில் நீண்ட காலம் பிசினஸ் செய்து வந்துள்ளார். கடந்த 30ஆண்டுகளாக பாண்டிச்சேரிக்கு அடிக்கடி வந்து செல்லும் பழக்கம் தனக்கு உள்ளதாக கூறும் லலிதா,பாண்டிச்சேரியில் அதிகம் உள்ள பெண் வாக்காளர்களும் தனக்கு பிளஸ் பாயிண்ட் என்று கூறுகிறார்.
மொத்தத்தில் எந்தவித குழப்பமும் இன்றி, பா.ஜ.க. நிர்வாகிகள் அனைவரும் ஒரே மனதோடு லலிதாவுக்காகபிரச்சாரம் செய்ய தயாராகி வருகிறார்கள். இதுவே தங்களது கிடைத்த பாதி வெற்றி என்று பா.ஜ.க. தரப்பு கூறிவருகிறது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications