ஜ.மு.கூ. புகார் குறித்து விரைவில் முடிவு: டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சென்னை:
வாக்காளர் பட்டியலில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் கொடுத்துள்ள புகார் குறித்துவிரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் புகார்கொடுத்துள்ளன. இது குறித்து ஆய்வு நடத்தி விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சித்து அதிமுக தேர்தல் அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளதாக வந்துள்ள புகார் கூறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டப்பூர்வ கருத்தைஅறிந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சுவர் விளம்பரங்கள், விளம்பரப் பலகைகளை அகற்றச் சொல்லி விதிக்கப்பட்டிருந்த காலக் கெடு முடிவடைந்துவிட்டது. விரைவில் டெல்லியிலிருந்து சிறப்பப் பார்வையாளர் ஒருவர் சென்னை வரவுள்ளார். தமிழகம் முழுவதும்சுவர் விளம்பரங்கள், விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதா என்பதை அவர் மேற்பார்வையிட்டு, உரியநடவடிக்கை எடுப்பார்.
தேர்தல் நடத்தை விதிமீறல், முறைகேடுகள் ஆகியவை குறித்தும் இந்த சிறப்புப் பார்வையாளர் மேற்பார்வையிட்டுநடவடிக்கை எடுப்பார் என்றார் அவர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications