கோஷ்டி மோதலால் காங். வேட்பாளர் தேர்வில் தொடர்ந்து குழப்பம்
சென்னை:
10 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதில் காங்கிரஸ் மேலிடத்திற்கு பெரும்குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரச்சாரத்தில் உள்ள சோனியா அடுத்த வாரம் டெல்லி திரும்பிய பின்னரே பட்டியல்இறுதி செய்யப்படும் என்பதால் அங்கு முகாமிட்டிருந்த தமிழகத்தின் பல்வேறு கோஷ்டிகளும் ஊர் திரும்பஆரம்பித்துவிட்டன.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் நீலகிரியில் ஆர்.பிரபு, மயிலாடுதுறையில்மணிசங்கர அய்யர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது முன்னால் தா.ம.கவுக்கு 6 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று வருகிறார் வாசன்.இதனால் மீதமுள்ள 8 பேருடைய பெயர்களை இன்னும் இறுதி செய்ய முடியாமல் தவிக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
அய்யர் தனி கோஷ்டி. நீலகிரியில் இடம் பிடித்துவிட்ட பிரபுவோ இளங்கோவன் கோஷ்டி. சேலத்தை கேட்கும்தங்கபாலு வேறு கோஷ்டி. சிவகங்கையை கேட்கும் ப.சிதம்பரம் வேறு கட்சி!.
இது தவிர தனக்கு கோபிச்செட்டிப்பாளையத்தை வாங்கிவிடும் முயற்சியில் இருக்கும் இளங்கோவன், தனதுஆதரவாளரான பீட்டர் அல்போன்சுக்கும் ஒரு தொகுதியைக் கேட்கிறார்.
இப்படி எல்லாம் போக தனது ஆதரவாளர்களுக்கு வெறும் 4 சீட் மட்டுமே கிடைக்கும் என்பதால் பட்டியலை இறுதிசெய்ய விடாமல் வாசன் தடை போடுவதாகத் தெரிகிறது.
உங்கள் கோஷ்டியில் உங்களுக்கும் பிரபுவுக்கும் சீட் கொடுத்துவிட்டோம். இதனால் பீட்டருக்கு சீட் கிடையாதுஎன்று இளங்கோவன் தரப்பை அடக்கிவிட்டு, 5 இடங்களை வாசன் கோஷ்டிக்குத் தந்து பிரச்சனையைத் தீர்க்ககாங்கிரஸ் மேலிடம் முயன்று வருகிறது.
வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பதில் தாமதமாக. தாமதமாக தமிழக காங்கிரசார் மத்தியில் டென்ஷன் கூடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே டெல்லியில் முகாமிட்டு எப்படியாவது சீட் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தகுட்டித் தலைவர்கள் பலரும் ஊர் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
கருணாநிதியுடன் பிரபு சந்திப்பு:
இதற்கிடையே நீலகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் ஆர்.பிரபு இன்று திமுக தலைவர்கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மரியாதை நிமித்தம் கருணாநிதியை சந்தித்தேன். தேர்தல் பிரசாரம்தொடர்பாகவும் விவாதித்தேன். கூட்டணியைச் சேர்ந்த மற்ற கட்சித் தலைவர்களையும் விரைவில் சந்திப்பேன்.
நீலகிரி தொகுதியின் முக்கியப் பிரச்சினை தேயிலை விவசாயிகளின் பிரச்சினைதான். ஜெயலலிதாவின் ஆட்சியில்சிறு தேயிலை விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதை முன் வைத்து தான் பிரசாரம்செய்யப் போகிறேன் என்றார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications