மீண்டும் ராமர் கோவில் குறித்து அத்வானி பேச்சு: ஜெ. கொடுக்கும் தைரியமே காரணம்- கருணாநிதி
சென்னை:
ஜெயலலிதா கொடுக்கும் தைரியத்தாலும், திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இல்லை என்பதாலும்அயோத்தியில் மீண்டும் ராமர் கோவிலைக் கட்டுவோம் என்று துணைப் பிரதமர் அத்வானி பேசி வருவதாக திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் அவர் எழுதியிருப்பதாவது:
அயோத்தியில் மீண்டும் ராமர் கோவில் கட்டப்படும் என்று அத்வானி பேசி வருகிறார். இந்தப் பேச்சு மதக்கலவரத்தையே ஏற்படுத்த உதவும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் இருந்தபோது, அத்வானி இவ்வாறு பேசத்துணிந்ததில்லை. ஆனால் இப்போது நாங்கள் வெளியேறிவிட்ட காரணத்தினாலும், ஜெயலலிதா கொடுக்கும்தைரியத்தாலும் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என்று பேசத் தொடங்கியுள்ளார்.
பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கும்போதே ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டுவோம் என்று நாட்டின் துணைப்பிரதமரே பேசுகிறார். ஜெயலலிதாவின் கொடுக்கும் தைரியத்தால் இந்த அயோத்தி பூனைக் குட்டி மீண்டும்வெளியே வந்துவிட்டது.
காவிப் பிரச்சினையில் நான் துரோகம் செய்து விட்டதாகப் பேசுகிறார் ஜெயலலிதா. ஆனால் காவிரி ஆணையக்கூட்டம் நடந்தபோது அதைப் புறக்கணித்தது, பாதியில் வெளிநடப்புச் செய்தது, பின்னர் கூட்டத்திற்கே போகாமல்தவிர்த்தது, பிரதமர் தமிழகம் வந்தபோது அவரிடம் மனு கூட கொடுக்காமல் கொடைக்கானலுக்கு ஓடிப் போனதுயார் என்பதை மக்கள்அறிவார்கள்.
காவிரி ஆணையத்தை செயல்பட விடாமல் முடக்கிப் போட்டது ஜெயலலிதாதான். இதை வாஜ்பாயும் அறிவார்.
அதே போல தமிழகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் செய்யும் தேர்தல் விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்விசாரிக்கிறோம் என்று கூறியே காலத்தை தேர்தல் கமிஷன் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்கருணாநிதி.
தமிழகம், கேரளம், கர்நாடகத்தில் தனது ரத யாத்திரை நடந்தபோது ராமர்கோவில் பற்றி வாயே திறக்காதஅத்வானி இப்போது மகாராஷ்டிர எல்லையை நெருங்கியுள்ள நிலையில் கோவில் கட்டுவோம் என்று பேசஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் மாநிலங்களில் மதத்தை வைத்து ஓட்டு வாங்க முடியாது என்பதால் அந்தந்த மாநிலத்துக்குத் தக்கவாறு பேசிவந்தார் அத்வானி. அவரது பயணம் குஜராத், உ.பியை அடையும்போது ராமர் கோவில் பிரச்சாரத்தையே மீண்டும்முன்னிருத்துவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications