தேர்தல் விதி மீறல்கள்: தமிழகத்துக்கு சிறப்பு பார்வையாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் தேர்தல் விதி மீறல்களைக் கண்காணிப்பதற்காக தலைமைத் தேர்தல் ஆணையம் சிறப்புப்பார்வையாளர் ஒருவரை நியமித்துள்ளது.

தமிழகம் முழுவதிலும் வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே வீட்டுக்கு வீடு செனறுவாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம்திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த விடுதலை விரும்பி (திமுக), திண்டிவனம்ராமமூர்த்தி (காங்கிரஸ்), நன்மாறன் (மதிமுக), எஸ்.எஸ்.தியாகராஜன் (சிபிஐ), நந்தகோபால் (சிபிஎம்), அப்துல்வஹாப் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), கே.பாலு(பா.ம.க.) ஆகியோர் அடங்கிய குழுவினர்கிருஷ்ணமூர்த்தியிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

இதில், வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. தமிழகம் முழுவதிலும் பெருமளவு வாக்காளர்குளறுபடிகள் நடந்துள்ளன. ஆளுங்கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட ஒரு குடிசை வீட்டில் 410 ஓட்டுக்கள் இருப்பதாகவாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, துறைமுகம் தொகுதியில் ஒரு வீட்டில் 277 ஓட்டுக்கள்உள்ளதாக வாக்காளர் பட்டியல் தெரிவிக்கிறது.

எனவே உடனடியாக தமிழகம் முழுவதும் வீடு வீடாக நேரடியாக சென்று வாக்காளர் பட்டியலை சரி செய்யஅதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

கிருஷ்ணமூர்த்தி பதில்:

இதனையடுத்து வாக்காளர் பட்டியலில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என்று கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

சென்னையில் அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின் டெல்லி திரும்ப விமான நிலையம் வந்தகிருஷ்ணமூர்த்தி. செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள்நடந்துள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் கொடுத்துள்ளன. இது குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கைஎடுக்கப்படும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சித்து அதிமுக தேர்தல் அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளதாக வந்துள்ள புகார் கூறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டப்பூர்வ கருத்தைஅறிந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலின்போது ஒருதலைப் பட்சமாக செயல்படும் போலீஸார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.தேர்தலுக்காக மத்திய துணைநிலை ராணுவம் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இவர்களை பாதுகாப்புக்காகமட்டுமின்றி தேர்தல் பணியிலும் ஈடுபடுத்தும்படி போலீஸாரிடம் கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர்கோபாலசாமி விரைவில் சென்னை வந்து போலீஸார் எவ்வாறு தேர்தலில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்துஆலோசனை வழங்குவார்.

மாநில தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மட்டுமின்றி அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் புகார்பெட்டி வைக்கப்படும்.

சுவர் விளம்பரங்கள், விளம்பரப் பலகைகளை அகற்றச் சொல்லி விதிக்கப்பட்டிருந்த காலக் கெடு முடிவடைந்துவிட்டது. நான் திருவள்ளூரில் இருந்து சென்னை வரும்போது பொது இடங்களில் தேர்தல் விளம்பரங்கள்செய்யப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அதை உடனடியாக அழிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறேன்.

விரைவில் டெல்லியிலிருந்து சிறப்புப் பார்வையாளராக பாசு என்ற உயர் அதிகாரி சென்னை வரவுள்ளார். அவர்தமிழகத்தில் நடக்கும் விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார் என்றார் கிருஷ்ணமூர்த்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+