அமைதி காக்க தா.கி. குடும்பம் முடிவு: நிம்மதியில் திமுக- கோபத்தில் அதிமுக
சிவகங்கை:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ செயல்படாமல் அமைதியாகஇருக்க மதுரையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணனின் குடும்பத்தினர் முடிவுசெய்துள்ளனர்.
இதனால் திமுக நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகிறது. அதே நேரத்தில் அதிமுக தரப்பில் நறநற கேட்கிறது.
கடந்த ஆண்டு மே மாதம் மதுரையில் வீட்டுக்கு அருகே வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது, தா.கி படுகொலைசெய்யப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி உள்ளிட்ட 13 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
தா.கி.கொலையையடுத்து சிவகங்கை மாவட்ட திமுகவில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. தா.கி. ஆதரவாளர்கள்கட்சியை விட்டு விலகினர். மேலும் அழகிரியின் உயிருக்கும் ஆபத்து நேரலாம் என்ற பரபரப்பான சூழ்நிலைநிலவியது.
இந் நிலையில் தா.கியின் தம்பி ராமையாவும், தா.கியின் மகனும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களதுகுடும்பங்களுக்குப் பாதுகாப்பு கோரினர். இதனால் அவர்கள் அதிமுகவுக்குச் சாதகமாக மாறுவார்கள் என்றுகருதப்பட்டது.
ஆனால், அவர்களை முன்னாள் சபாநாயகர் பழனிவேல் ராஜன் மூலமாக திமுக தரப்பு கூல் செய்துவிட்டதாகத்தெரிகிறது. அழகிரியின் ஆட்டம் காரணமாக திமுகவிடம் இருந்து ஒதுங்கியே இருந்த பழனிவேல்ராஜன், தனதுநெருங்கிய நண்பரான தா.கி. கொலைக்குப் பின் கட்சிக்கு எதிராகவே மாறினார்.
ஆனால், பழனிவேல்ராஜனின் நெருங்கிய சொந்தத்தில் தனது மகளுக்கு ஸ்டாலின் திருமண சம்பந்தம் செய்துகொண்டதன் மூலமாக திமுகவுடனான அவரது உறவு சகஜநிலைக்கு திரும்பியுள்ளது. இந்தக் காதல்திருமணத்துக்காக ஸ்டாலின் தன் வீடு தேடி வந்த பெருந்தன்மையை பழனிவேல்ராஜன் பெரிதும்பாராட்டியதோடு, அழகிரிக்கு செக் வைக்க ஸ்டாலினுடன் தனது நட்பையும் பலப்படுத்திக் கொண்டு வருகிறார்.
பழனிவேல்ராஜன் மூலமாக தா.கி. தரப்புடன் திமுக பேசியதன் விளைவாக அவரது குடும்பத்தினர் இந்தத்தேர்தலில் அமைதிகாக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தா.கி. கொலையை அரசியலாக்கி குளிர்காய நினைத்தஅதிமுகவினர் இதனால் வெறுத்துப் போயுள்ளனர்.
மேலும் தா.கியின் உறவினரான பவானி ராஜேந்திரனை ராமநாதபுரம் தொகுதியில் நிறுத்தியிருக்கிறார் கருணாநிதி.இதனால், ஜாதிரீதியில் எழுந்த எதிர்ப்பையும் ஓரளவுக்கு அடக்கியுள்ளார்.
தா.கியின் தம்பி ராமையா இப்போதும் திமுக கரைவேட்டியுடன் தான் உலா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications