வைகோ வழக்கு: 2 அரசு சாட்சிகள் பல்டி!
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீதான பொடா வழக்கில் 2 அரசு தரப்பு சாட்சிகள்தங்களது வாக்குமூலத்தை மறுத்துள்ளனர்.
மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகபேசியதாகக் கூறி வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான சாட்சிகள் சசிக்குமார், நேதாஜி ஆகியஇருவரும் தங்களது வாக்குமூலத்தை மாற்றிச் சொல்லியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜன் சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்தின் ஊழியர் சசிக்குமார் கூறுகையில், கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம்தேதி திருமங்கலத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில், எனது உரிமையாளரின் உத்தரவுப்படி ஒலிபெருக்கிகள்,மின்சார சாதனங்களை அமைத்திருந்தேன்.
மாலை 6 மணி வரை கூட்டம் எதுவும் நடக்கவில்லை. மேடையிலும் யாரும் இல்லை. அதன் பின்னர்ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்று விட்டேன். பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தின்போதுஜெனரேட்டர் சப்தம் காரணமாக பேச்சாளர்களின் பேச்சுக்கள் எதுவும் எனக்குக் கேட்கவில்லை. மேடையில் யார்இருந்தார்கள் என்பதும் எனக்குச் சரியாகத் தெரியவில்லை என்றார்.
ஆட்டோ டிரைவர் நேதாஜி கூறுகையில், ராஜன் சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்தில் 2 மாதங்கள் மட்டுமே நான் வேலைபார்த்தேன். மதிமுக பொதுக் கூட்டம் குறித்து எனக்கு சரியாக நினைவில்லை. எனவே இது குறித்து போலீஸாரிடம்நான் எதையும் சொல்லவில்லை என்றார்.
இரு சாட்சிகளும் போலீஸாரிடம் கூறிய வாக்குமூலத்தை மறுத்து மாற்றிக் கூறியதால் நீதிமன்றத்தில் பரபரப்புஏற்பட்டது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications